?தனி நிறுவனமானது போக்கோ!

entertainment

ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்திய போக்கோ எஃப் 1 என்ற ஸ்மார்ட்ஃபோன், தற்போது தனி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஜியோமி நிறுவனத்தால் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘போக்கோ எஃப் 1’ ஸ்மார்ட்ஃபோன் கடந்த சில ஆண்டுகளில் சந்தைக்கு வந்த ஸ்மார்ட்ஃபோன்களில், குறைந்த விலையில் அதிக அம்சங்களுடன் வெளிவந்த ஒன்று.

இந்த சீரிஸ் ஒரேயொரு ஸ்மார்ட்ஃபோன் தான் வெளிவந்துள்ளது. இதனுடைய அடுத்த மாடல் எப்போது வெளியாகும் என்ற ஆவல் ஸ்மார்ட்ஃபோன் பிரியர்கள் மத்தியில் இருந்துவந்தது. ஆனால் அதைப்பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

2020ஆம் ஆண்டு ஜியோமி நிறுவனம் போக்கோ எஃப் 2 -யை வெளியிடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ள சமயத்தில், ஜனவரி 17ஆம் தேதி போக்கோ ஸ்மார்ட்ஃபோனை தனி நிறுவனமாக அறிவித்தார்கள்.

ஜியோமி நிறுவனத்தின் துணைத்தலைவர் குமார் அவர்கள், போக்கோ பெயரில் வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன் இன்றுவரை வெற்றிகரமான இடத்தில் இருக்கிறது, இதுவரை வெளிவந்த பிரபலமான ஸ்மார்ட்ஃபோன்களில் அதுவும் இருக்கிறது,” என்றார்.

ஐம்பதிற்கும் மேற்பட்ட சந்தைகளில், இந்திய பணமதிப்பீட்டின் படி ரூபாய் 20 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட போக்கோ எஃப் 1, 2020 ஆம் ஆண்டு சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, இவைகளை கருத்தில் கொண்டு போக்கோ நிறுவனத்தை ஜியோமியிலிருந்து பிரித்து, தனி நிறுவனமாக மாற்றியதாக, ஜியோமியின் துணைத்தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *