மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

சிநேகாவின் பயிற்சி வீடியோ!

சிநேகாவின் பயிற்சி வீடியோ!

பொங்கல் அன்று வெளியான பட்டாஸ் திரைப்படம், ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சிநேகா இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

“அடிமுறை” என்ற பாரம்பரிய தமிழ் தற்காப்பு கலையை மையக்கருவாக கொண்டது இத்திரைப்படம். இதில் சிநேகா அடிமுறை கொண்டு எதிரிகளை தாக்குவதாக சில காட்சிகள் உள்ளன. தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இப்படத்தின் சண்டை காட்சிகள் வடிவமைப்பை திலிப் சுப்புராயன் மேற்கொள்ள, அடிமுறை சண்டை காட்சியின் பிரத்யேக பயிற்சியை பிரேசில் சண்டை பயிற்சியாளர் ஜோவ் டல்டேகன் செய்துள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் நிவின் பாலி மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான காயம்குலம் கொச்சுண்ணி மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் தயாரான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் பணியாற்றி இருக்கிறார்.

சிநேகா பகிர்ந்துள்ள வீடியோவில் பயிற்சியாளர் கண்காணிப்பில் கடுமையான பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ள நிலையில், திரைத்துறையினரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

நடிகை சிநேகா, ’பார்த்திபன் கனவு’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர், சில சவாலான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களின் பேராதரவை பெற்று திரைத்துறையின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தமிழில் கடைசியாக 2017ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷுடன் நடித்திருக்கும் “பட்டாஸ்” அவரை மீண்டும் தவிர்க்க முடியாத நடிகை என்பதை உறுதிபடுத்தி உள்ளது.

View this post on Instagram

A post shared by Sneha Prasanna (@realactresssneha) on

சனி, 18 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon