மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

அரண்மனை 3: ஆடம்பரம்-கவர்ச்சி-திகில்!

அரண்மனை 3: ஆடம்பரம்-கவர்ச்சி-திகில்!

சுந்தர்.சி இயக்கத்தில் ஹிட் அடித்த அரண்மனை 1 மற்றும் அரண்மனை 2 ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகத் தொடங்கிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அரண்மனை சீரீஸின் முதல் பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, மூன்றாவது பாகத்தில் இணைந்திருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

அரண்மனை திரைப்படத்தின் இரண்டு பாகங்களும், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவையாக இருந்தன. அப்படி இருந்தும் ஹன்சிகாவையே பேயாக வைத்து மீண்டும் மீண்டும் படம் எடுக்கவேண்டுமா என்றும், ஒரு மாற்றத்துக்காக வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே என்றும் சுந்தர்.சி-யிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சூழல் இப்படியிருக்கும் போது, ஹன்சிகாவே பேயாக நடிக்கும் அரண்மனை 3ஆம் பாகத்தில், முதல் பாகத்தில் நடித்த ஆண்ட்ரியாவைக் கொண்டுவந்திருப்பது இந்த அரண்மனை திரைப்படத்தை தொடர்கதையாக சுந்தர்.சி கொண்டுபோகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா ஆகிய இருவர் மட்டுமில்லாமல் நடிகை ராஷி கண்ணாவும் இந்தத் திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இவர்கள் அனைவருடனும் அரண்மனையை கலகலப்பாக வைத்துக்கொள்ள விவேக்-யோகி பாபு ஆகியோரின் காமெடி கூட்டணி இந்தப்படத்தில் மீண்டும் இணைகிறது. பிகில் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நகைச்சுவை காட்சிகள் அந்தப்படத்தில் இல்லை. அந்தக்குறையை அரண்மனை 3 திரைப்படத்தில் போக்குவார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது.

செவ்வாய், 21 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon