மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 29 பிப் 2020

Tik Tok செயலிக்கு ஸ்பீட்-ப்ரேக்கராக வருகிறது Byte!

Tik Tok செயலிக்கு ஸ்பீட்-ப்ரேக்கராக வருகிறது Byte!

நெட்டிசன்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான 'Tik Tok' செயலி போலவே, குறைந்த நேரத்திற்கு வீடியோவை பதிவு செய்து வெளியிடும் 'Byte' என்ற செயலி தற்போது அறிமுகமாகியுள்ளது.

'Vine' என்ற செயலியின் தயாரிப்பாளரான 'டாம் ஹோஃப்மேன்' 2 ஆண்டுகளில் 'Tik Tok' போன்ற ஒரு செயலியை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று(25.01.2020) 'Byte' என பெயர் கொண்ட செயலி, ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்காக வெளியாகியுள்ளது.

6 நொடிகளுக்கே வீடியோவை பதிவு செய்து வெளியிடமுடியும் என்றாலும், இந்த 'Byte' செயலியில் பிரபலமாக இருப்பவர்களுக்கு வருமானம் பெறும் வழிகளையும் இந்த செயலி , விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

'Tik Tok,' 'SnapChat' போன்ற செயலிகளில் இந்த வகையான வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் இல்லாத காரணத்தால், இந்த 'Byte' அதுபோன்ற செயலிகளுக்கு மிகவும் சவாலானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 25 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon