டிக் டாக்: ஐந்து நொடியில் அசத்தல் மெசேஜ்!

‘ஒரு நிமிட டிக் டாக் வீடியோவால் பெரிதாக என்ன மாற்றம் செய்துவிட முடியும்?’ என்ற கேள்வி பலரது மனத்திலும் எழுந்திருக்கும்.
ஆனால், குடும்பத்துக்காக ஆசைகளைத் துறந்து வேலை செய்பவர்கள், வேலைக்குச் செல்ல விருப்பம் இருந்தும் வீட்டிலேயே இருக்க வைக்கப்பட்டவர்கள் என எத்தனையோ பேருக்கு, டிக் டாக் பல ஆசைகளையும் பூர்த்தி செய்துள்ளது. அவர்கள் மறைத்து வைத்த பல திறமைகளுக்கும் இந்த டிக் டாக் செயலி மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.
தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்த மட்டுமின்றி அதையும் தாண்டி சில நுணுக்கமான விஷயங்களையும் வீடியோக்களாக மாற்றி பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். ஒரு நிமிட வீடியோவில் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி இருக்கும்போதே, ஐந்து நொடி வீடியோவால்கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஒரு வீடியோ உணர்த்தியுள்ளது.
ஐந்து நொடிகள் என்பது நம்மை அறியாமல் நாம் கடந்து செல்லும் சிறு நேர இடைவெளியாக இருந்தாலும், அந்த வீடியோ அதே குறுகிய நேரத்தில் தான் கூற வந்த கருத்தை மிக ஆழமாகக் கூறிச் சென்றுள்ளது. இரு மஞ்சள் நிற பந்துகள் அருகருகில் இருக்கின்றன. ஒன்று அன்பை வெளிப்படுத்துவதாகவும் மற்றொன்று அதைக் கண்டு வெட்கப்படுவதாகவும் அவற்றிற்கு இடையேயான உறவை உணர்த்துகிறது. திடீரென சிவப்பு நிறத்தில் கோபத்தை உணர்த்தும் விதமான பந்து ஒன்று அவற்றின் அருகில் சென்று தட்டுகிறது. உடனடியாக இரு பந்துகளும் உருகிப்போய் உருக்குலைந்து விடுகிறது.
@preetu96 Anger Kills Ur Happiness Nd Love 🙂#keepsmile #UpForXtra #love #happiness #status #foryou #foryoupage #tiktokindia #keepsupporting
♬ original sound - POP Mahesh Sharma
உறவுகளை உடைத்துவிட புரிதலற்ற கோபத்துக்கு ஆற்றல் உள்ளது என்பதை உணர்த்திய அந்த வீடியோவை நாற்பது லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ப்ரீத்து என்ற பெண் பதிவேற்றிய அந்த வீடியோ மூன்று லட்சத்துக்கும் அதிகமான இதயங்களையும், 450-க்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் வாங்கிக் குவித்துள்ளது.