மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 ஜன 2020

பிளான் பண்ணி பண்ணணும்: அப்டேட் குமாரு

பிளான் பண்ணி பண்ணணும்: அப்டேட் குமாரு

‘அண்ணே, இந்த அமைச்சர் ஒருத்தர் ரெண்டு திராவிடக் கட்சிகளையும் தவிர மீதி எல்லாமே சில்லற கட்சிகள் தான்னு சொல்லி இருக்காரே, சில்லற கட்சின்னு பாஜக-வையும் சேர்த்தா சொன்னாரு. இதில கூட்டணி தர்மம் எல்லாம் அஃபெக்ட் ஆகாதா?’-ன்னு டீக்கடை அண்ணன் கிட்ட ஒருத்தர் கேட்டாரு. ‘அப்பனே தம்பி, என்னைய விட்டிருடா, அவங்களைப் பத்தி எதையாச்சும் பேசி என்னைய ஆண்டி இண்டியன் சொல்றதுக்கா’ன்னு கேட்டிட்டு டீ போட்டிட்டு இருந்தாரு. ‘சரிங்க அண்ணே அத விடுங்க, பெரியார் சிலையை உடைச்சதுக்காக ஒருத்தர கைது பண்ணி இருக்காங்களே, நியூஸ் பாத்தீங்களா? பெரியார் பத்தி அவதூறு சொன்னதுக்கே கண்டனம் தெரிவிச்ச ‘அய்யா’ கட்சியில இருந்து இப்படி பண்ணது அவருக்கு பெரிய மன உளைச்சலத் தந்திருக்கும் இல்லே?’னு கேட்டாரு. ‘தப்பா பேசக் கூடாதுன்னு தானே சொன்னாங்க. சிலைய உடைக்கக் கூடாதுன்னு சொல்லலையே. எதோ மிஸ் கம்யூனிகேஷன் ஆயிருச்சுன்னு நெனைக்கிறேன். இதத்தான் பிளான் பண்ணி பண்ணனும்னு சொல்றாங்களோ’ன்னு கேக்குறாரு. அதுக்கு ஆமான்னும் இல்லாம, இல்லேன்னும் சொல்லாம வித்தியாசமான ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தவரு. ‘குமாரு நாளைக்கு கடை லீவுப்பா’ன்னு சொல்லி பேச்ச மாத்தினாரு. என்ன விஷயம்னு கேட்டா, ‘இல்லே, இந்த ஏர் இந்தியா வாங்க என்ன பிராசஸ்னு பாக்கணும்’னு சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் அடுத்து எத விக்கப் போறாங்கன்னு பாத்துகிட்டு வர்றேன்.

இதயவன்

ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக விற்க மத்திய அரசு முடிவு

ஒன்னுஒன்னா என்னைக்கு முடிய?..மொத்தமா ஒரு ரேட் போட்டு வித்துற வேண்டியது தான இந்தியாவை?!!

இது தான் புதிய இந்தியாவா?!!

அபி

விட்டுக் கொடுத்து வாழ்பவன்

வீதியில் திரிகிறான்.

போட்டுக் கொடுத்து வாழ்பவன்

வீராப்பாய் சிரிக்கிறான்

அருள் மொழி வர்மன்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

இதை முழுசா புரிஞ்சிக்கிட்டது "கொரோனோ வைரஸ்" தான் பாகுபாடு காட்டாம எல்லார் கிட்டயும் பழகுது....

நாடு , இனம் , மதம் எல்லாம் பாக்குறது இல்ல....

சென்னிமலை சி.பி.செந்தில் குமார்

"பட்டு"தான் திருந்துவேன்

என அடம் பிடிப்பதில்லை

பட்டுப்பூச்சிகள்

சரவணன். ℳ

நோயாளியிடம் "Be Positive" என்றார் டெக்னீஷியன், ஹெச்ஐவி டெஸ்ட்டுக்குப் பிறகு.

Prem Kumar

குரூப் 4 தேர்வில் முறைகேடு,

காவலர் தேர்வில் முறைகேடு,

ஆசிரியர் தேர்வில் முறைகேடு.

இந்த இலட்சணத்தில்

5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு

கருப்பு மன்னன்

ஏர் இந்தியா வாங்கணும்

ட்விட்டர் பிரபலம் : தம்பி டோக்கன் வாங்கிட்டு வரிசையில நில்லு

சரவணன். ℳ

பேருந்து பயணத்தில் தூங்கிவிட்டால் அவரவர் ஊரில் இறங்க முடியாமல் வேறு ஊரில் இறங்கி கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் தூங்க விடாமல் தடுக்க சில்லறையை இறங்கும் போது வாங்கிக் கொள்ள சொல்கிறார் கண்டக்டர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?

ஜோக்கர்

மூடநம்பிக்கையில் சேர்க்க வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று,

"மக்களால்

மக்களுக்காக"

நடக்கும் ஆட்சியே "மக்களாட்சி"

கோழியின் கிறுக்கல்!!

ஏர் இந்தியாவாய் என் காதல்,

ஏனோ மத்திய அரசாய் உன் செயல்கள்!!

மாஸ்டர் பீஸ்

அவ்வப்போது எதையாவது தொலைத்துக் கொண்டிருக்கும் குழந்தையாகவும்,

எப்போதும் எதையாவது தேடிக்கொண்டிருக்கும் ஞானியாகவும்,

நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும் வாழ்க்கை!

நாட்டுப்புறத்தான்

ஆறு நாட்களில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டுகிறது சீன அரசு -செய்தி!

இங்க யாரோ, 6 வருசமா 13 இடங்கள்ல எய்ம்ஸ் மருத்துவமனைய கட்றேன்னு வெறும் அடிக்கல்ல மட்டுமே நாட்டு நாட்டுனு நாட்டிட்ருக்கு...

மித்ரா

உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். அமைதியின் வெளிப்பாடு பேரொலியாக இருக்கட்டும்..!

Drashti Dhami

கோபம்வரும் போது வாயை மூடிக்கொள்!!

குழப்பம்வரும் போது கண்களை மூடிக்கொள்!!

தோல்விவரும் போது காதுகளை மூடிக்கொள்!!

வெற்றிவரும் போது மனதை மூடிக்கொள்!!

Mr. Ak

வாழ்க்கையை வாழவே முயற்சிக்காத போது..!!

வாழ்க்கையை என்னால்

ஜெய்க்க முடியவில்லை என்று

வருந்துவதில் எந்த வித

நியாயமும் இல்லை..!!

முயற்சி திருவினையாக்கும்..!!

எமகாதகன்

2021 தேர்தல்

ரஜினி vs ஸ்டாலின் ஆகத்தான்

அமையும்

-தமிழருவி மணியன்

ஏம் மணியா நாம்ம தான் இன்னும் கட்சியே

ஆரம்பிக்கலையே எதுக்கு இந்த விளம்பரம்

முகமூடி

விழுந்தால் தூக்கிவிட யாருமில்லை என்பதை உணர்ந்தவனே, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் யோசித்து வைக்கிறான்..!!

amudu

"எந்தெந்த உணவை சாப்பிட்டால், என்ன கெடுதல் ஏற்படும்" என்று வாட்ஸபில் வரும் மெசேஜ்களை படித்து, அதன் படி வாழ நினைத்தால், பட்டினி கிடந்து தான் சாக வேண்டும்.

தமிழன்டா

52 லட்சம் மிஸ்டு கால்களை காட்டி CAA ஆதரவு என்றவர்கள்

70 லட்சம் பேர் மனிதச்சங்கிலியாக CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை பார்த்து ஏதேனும் வாய் திறந்தார்களா

-லாக் ஆஃப்

இப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்

3 நிமிட வாசிப்பு

இப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்

விஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !

3 நிமிட வாசிப்பு

விஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !

இந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

திங்கள் 27 ஜன 2020