மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 ஜன 2020

கிரிக்கெட் வீரர்களின் இதயங்கள் இணைகின்றன!

கிரிக்கெட் வீரர்களின் இதயங்கள் இணைகின்றன!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்துவதாக அறிவித்திருந்தது. வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறப்போகும் இந்தப் போட்டியில், பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் தலைமையிலான இரு அணிகள் மோதவுள்ளனர். இந்தப் போட்டிக்கான பயிற்சியாளர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் வால்ஷ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதில் விளையாடும் வீரர்கள் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையைக் கைப்பற்றியபோது, தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட யுவராஜ் சிங் பெயர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுடைய பெயரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான மைக்கேல் ஹஸ்ஸி, பிராட் ஹாடின், மேத்தியூ ஹெய்டென், ஆடம் கில்கிறிஸ்ட், ஆன்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கேல் கிளார்க், ஜஸ்டின் லங்கேர் என்று எண்ணற்ற ஸ்டார் பட்டாளம் இந்த அணிகளில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்

3 நிமிட வாசிப்பு

இப்படியா செய்வார் விக்ரம் ? கடும் கோபத்தில் மணிரத்னம்

விஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !

3 நிமிட வாசிப்பு

விஜய், கமலுக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் தேர்ந்தெடுத்த ஹீரோ !

இந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

திங்கள் 27 ஜன 2020