மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

கஞ்சா அடித்திருக்கிறேன்: பாக்யராஜ்!

கஞ்சா அடித்திருக்கிறேன்: பாக்யராஜ்!

தேர்டு ஐ(3rd Eye) கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி 'அட்டு' நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மரிஜுவானா' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியபோது, நானும் சிறு வயதில் கஞ்சா அடித்திருக்கிறேன் என கே.பாக்யராஜ் பேசியது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

மரிஜுவானா என்ற போதை கொடுக்கும் கஞ்சா செடியின்பால் ஆர்வம் கொண்ட இளைஞர்களின் வாழ்வைப் பற்றியது இத்திரைப்படம். எனவே, இதைப் பாராட்டிப் பேசவந்த பலரும் என்ன சொல்வதெனத் தெரியாமல் திணறினார்கள். தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி உதயகுமார் ஆகியோர் பேசும்போது தயாரிப்பாளர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்குமிடையே நடைபெற்றுவரும் அரசியல் போக்குகள் குறித்து பேசினார்கள். அப்போது பேசிய பாக்யராஜ், “இந்த படத்தின் பெயருக்கு அர்த்தம் கேட்டபோது, கஞ்சா என்று கூறினார்கள். 45 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து நானும் கஞ்சா அடித்திருக்கிறேன். ஒரு முறை போதையில் என் நண்பன் தன்னிலையறியாமல் இருப்பதைப் பார்த்தேன். இப்படி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்று அன்று முதல் கஞ்சா அடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன். இப்படம் கஞ்சா உபயோகிப்பதன் பாதிப்பை கூறுவதால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வாக அமையும்” என்றார்.

போதை பொருட்களை உபயோகப்படுத்துவதை காட்டும் காட்சிகள் மற்றும் அத்துமீறல்கள் அதிகமாக இருப்பதால் இந்தப்படத்துக்கு A சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறது. எனவே, குழந்தைகள் முதல் பலரும் இந்தப்படத்தைப் பார்க்க முடியாது.

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon