மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

டிக் டாக்: கொரோனா ஆம்லெட்டா?

டிக் டாக்: கொரோனா ஆம்லெட்டா?

துன்பம் வரும்போதும் அதுகுறித்தே யோசித்து கவலை அடையக்கூடாது என்று கூறுவார்கள்.

அதை பிற நாட்டினர் பின்பற்றினார்களோ இல்லையோ நமது தமிழக மக்கள் சிறப்பாக பின்பற்றி வருகின்றனர். அதையே முழு நேர வேலையாக எடுத்துக் கொண்ட மீம் கிரியேட்டர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. அவர்களின் உதவியுடன் இக்கட்டான பல சூழல்களிலும் புன்னகை சிந்த நம்மால் முடிகிறது.

உலகயே பெரும் அச்சுறுதலுக்கு ஆளாக்கி, அனைவருக்கும் மரண பயத்தைக் காண்பித்து வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவிலும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருவாத அறிவிப்பு வெளியாகியுள்ள சூழலில் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள்.

@nandhuloveall

##corona ##specal ##omblet 😂😂😂##funnyvideos ##fun ##with ##frnds##sundayspl

♬ original sound - Gaayathri actress

பாதுகாப்புக்காக இருந்தாலும், 21 நாட்கள் வீட்டுக்கு வெளியே செல்லாமல் முடங்கியே இருப்பது பலருக்கும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அதையும் சிறப்பான, பாதுகாப்பான கொண்டாட்டமாக பலரும் மாற்றி வருகின்றனர். அந்த வகையில் டிக் டாக்கில் பதிவிடப்பட்டுள்ள ஒரு வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

கொரோனாவைக் கண்டு உலகமே பயப்படும்போது, ஒருவர் ஆம்லெட்டை கொரொனா வடிவில் போட்டு அதையும் வீடியோ எடுத்துள்ளார். ஆம்லெட் கொரோனா வடிவில் இருந்தாலும், எந்த வடிவிலும் கொரோனா வராதவாறு பாதுகாப்பாக இருங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.

-டிக் டாக் யூஸர்

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon