மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

‘தல வீட்லயே இருக்காரு’: திமுக எம்எல்ஏ வெளியிட்ட வீடியோ!

‘தல வீட்லயே இருக்காரு’: திமுக எம்எல்ஏ வெளியிட்ட வீடியோ!

மக்கள் வீடுகளில் தனித்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக திமுக எம்எல்ஏ டி ஆர் பி ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், பெரும்பான்மையான மக்கள் அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் போன்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ-வாகப் பதவிவகிக்கும் டி ஆர் பி ராஜா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவாகவே அனைவரையும் சிரிக்கவைத்து சிந்திக்க செய்யும் பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அவர் பகிர்ந்த இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

அஜித் கதாநாயகனாக நடித்த மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார். அதில் அஜித், தனது வீட்டுக்குள்ளேயே தங்கி இருந்து அனைத்து வேலைகளையும் செய்வதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

வீடியோவைப் பகிர்ந்த அவர், “தல வீட்லயே இருக்காரு. நீங்க ??? வீட்டிலேயே இருங்கள். கொரோனா வரும்முன் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon