மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

வீட்டிலேயே உடற்பயிற்சி: முன்னுதாரணமான அருண் விஜய்

வீட்டிலேயே உடற்பயிற்சி: முன்னுதாரணமான அருண் விஜய்

தனது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது குறித்து அருண் விஜய் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாகப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. வீட்டுக்குள் இருக்கப்போகும் 21 நாட்களும் எவ்வாறு உணவுப் பொருட்கள் கிடைக்கும், எப்படி முடங்கியே இருப்பது என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது.

உடற்பயிற்சிக் கூடங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டு, தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றுவதில் தீவிரம் காட்டி வந்தவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் நடிகர் அருண் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது வீட்டு மாடியில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவர் பகிர்ந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. அத்துடன், “நீண்ட காலத்துக்குப் பின்பு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். வீட்டிலேயே பத்திரமாக இருங்கள். உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வீட்டிலேயே சில உடல் உழைப்பு தேவைப்படும் செயல்களைச் செய்யுங்கள். தேவையற்ற காரணங்களுக்காக அடுத்த 21 நாட்களும் தயவுகூர்ந்து வெளியே செல்ல வேண்டாம். நீங்கள் அன்பு செலுத்தும் அனைவருக்காகவும் இதைச் செய்யுங்கள்” என்றும் அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் உடலை நினைத்து கவலையில் ஆழ்ந்திருந்தவர்களுக்கு அருண் விஜய் வெளியிட்ட இந்த வீடியோ புதுவித நம்பிக்கையை அளித்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon