வைரமுத்து வரிகளுக்கு எஸ்.பி.பி பாடிய ‘கொரோனா’ பாடல்!

entertainment

கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் நீங்கும் விதமாகவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாடல் ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

பாடலாசிரியர் வைரமுத்து வரிகள் அமைத்த இந்தப்பாடலைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையமைத்துப் பாடியுள்ளார். இது குறித்த வீடியோவை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், **‘நாட்டு மக்களுக்கு ஒரு பாட்டு நம்பிக்கை. இசையமைத்துப் பாடிய எஸ்.பி.பி நன்றிக்குரியவர்’** என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசும்போது, ‘இந்தப்பாடல் இசைக்கானது கிடையாது. இதன் பாடல் வரிகளுக்காக நீங்கள் கேட்க வேண்டியது. இந்தப்பாடலின் மையக்கருத்தை நீங்கள் கேளுங்கள். பாடல் வரிகளின் ஆழம் என்ன, அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதனை செய்ய வேண்டியது தான் நமது கடமை.’ என்று குறிப்பிட்டார்.

*கொரோனா…கொரோனா…கொரோனா,*

*அணுவை விடவும் சிறியது*

*அணுகுண்டைப் போல் கொடியது*

*சத்தமில்லாமல் நுழைவது*

*யுத்தமில்லாமல் அழிப்பது*

*தொடுதல் வேண்டாம், தனிமை கொள்வோம்*

*தூய்மை என்பதை மதமாய் செய்வோம்*

*கொஞ்சம் அச்சம், நிறைய அறிவு*

*இரண்டும் கொள்வோம்; இதையும் வெல்வோம்*

*எத்தனை போர்கள் மனிதன் கண்டான்*

*அத்தனை போரிலும் அவனே வென்றான்*

*கொரோனாவையும் கொன்று முடிப்பான்.*

*கொள்ளை நோயை வென்று முடிப்பான்.*

*நாளை மீள்வாய் தாயகமே!*

*நாளைய உலகின் நாயகமே!*

என்பதாக அந்தப் பாடலின் வரிகள் அமைந்துள்ளது. இசையும், வரிகளும் இணைந்து கேட்போரை ரசிக்க வைப்பதுடன், நம்பிக்கை ஊட்டுவதாகவும் இந்தப்பாடல் அமைந்துள்ளது. ரசிகர்களைக் கவர்ந்த இந்தப்பாடல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *