‘மரணத்துக்கே வியர்த்து ஊத்தும்’: RRR ஸ்பெஷல் டீஸர்

entertainment

நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு RRR திரைப்படத்தில் இருந்து சிறப்பு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்தைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் RRR. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடிக்கும் இந்தத் திரைப்படம் 350 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இன்று(மார்ச் 27) நடிகர் ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ ஒன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக படக்குழுவினர் அனைவரும் வீட்டிலேயே இருந்து வேலை செய்வதால், சற்று தாமதமாக மாலை 4 மணிக்கு வீடியோ வெளியிடப்பட்டது.

அதில் மிரட்டலான தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராம் சரணின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ராம் சரணின் கதாபாத்திரம் குறித்து ஜூனியர் என்.டி.ஆர் விளக்குவதாக அந்த டீசர் அமைந்துள்ளது. **“அமைதியா நின்னா அவர் எரியிற தணல், சீறிப் பாய்ந்தால் அவர் வால் நட்சத்திரம். அவர் பக்கத்தில நெருங்கினா, மரணத்துக்கு வியர்த்து ஊத்தும் பாய்ந்து வரும் தோட்டா எல்லாம், அவர் நில்லுன்னா நிக்கும் அவர் யார் தெரியுமா? என் அண்ணன், காட்டுக்கு மன்னன்…அல்லூரி சீதாராம ராஜு”** என்று ராம் சரணின் கதாபாத்திரம் விளக்கப்படுகிறது. இதற்கான தமிழ் டப்பிங்கையும் ஜூனியர் என்.டி.ஆர் தனது சொந்த குரலில் பேசியுள்ளார் என்பது டீசரின் சிறப்பம்சம்.

சிறப்பான வீடியோவை வெளியிட்டு தனது பிறந்தநாளை மேலும் சிறப்பாக்கிய படக்குழுவினருக்கு நடிகர் ராம் சரண் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திரைப்படம் 2021 ஜனவரி 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *