மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

டிக் டாக்: ஆடிய பாதம் சும்மா இருக்குமா?

டிக் டாக்: ஆடிய பாதம் சும்மா இருக்குமா?

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கூட குறிப்பிட்ட கால அளவில் மட்டும் தான் வாங்க முடிகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நமது நாட்டில் தீவிரமாக பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களும் இதனைப் புரிந்துகொண்டு அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ஆனால், வேலையும் வருமானமும் இன்றி வீட்டிலேயே இருப்பது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிப்பதாகவே உள்ளது.

இந்த இக்கட்டான சூழலிலும் தானும் சிரித்து பிறரையும் சிரிக்க வைக்க சிலர் தவறுவதே இல்லை. அந்த வகையில் டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோ அனைவரையும் ரசிக்க வைக்கிறது. மரவேலைகள் செய்து வரும் தொழிலாளி ஒருவர் வேலை இன்றி வீட்டிலேயே இருப்பதால் காய்கறிகள் நறுக்குவதாக அந்த வீடியோ உள்ளது. ஆனால் அதனை சாதாரண கத்தியைப் பயன்படுத்தி வேகமாக வெட்டாமல், தச்சு வேலை செய்வதைப் போன்று சரியாக அளந்து உளி, சுத்தியல் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி வெட்டுகிறார்.

@rasigan2560

நகைச்சுவைக்காக மட்டும்😂🙏 ஆடிய பாதமும் பேசிய வாயும் சும்மா இருக்காதாம்? 😂🤣🙏##ungalrasigan

♬ original sound - Ungal Rasigan

அத்துடன், ‘நகைச்சுவைக்காக மட்டும். ஆடிய பாதமும் பேசிய வாயும் சும்மா இருக்காதாம்?’ என்ற வார்த்தைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலரையும் ரசிக்க வைத்த இந்த வீடியோ 59 ஆயிரம் லைக்குகளையும் வாங்கியுள்ளது.

-டிக் டாக் யூஸர்

திங்கள், 30 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon