எல்லா திறமைசாலிகளும் இங்க தான் இருக்காங்க: அப்டேட் குமாரு

entertainment

பதிமூணு நாளா வீட்டுக்குள்ளையே இருக்கோமே, ரொம்ப போர் அடிக்குத்துன்னு ஸ்கூல்ல கூடப் படிச்ச பசங்களுக்கு எல்லாம் ஃபோன் பண்ணி பேசிட்டு இருந்தேன். ஒரு நாள் லீவு கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்தவங்க எல்லாரும் இப்போ லீவே வேண்டாம்னு அழுறாங்க. அதில ஒருத்தன் “டேய் மச்சான், வீட்டிலயே இருக்குறது கூடப் பரவாயில்லடா. ஆனா என் தங்கச்சி கிட்ட தான் மாட்டிகிட்டேன். முன்ன எல்லாம் அம்மா சுடு தண்ணி வைக்க சொன்னா கூட, ‘நான் டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ், அதெல்லாம் பண்ண மாட்டேன்’னு சொல்லுவா, இப்போ என்னடான்னா யூட்யூப் பாத்து ஏதேதோ சமைக்கிறது மட்டும் இல்லாம அத சாப்பிட சொல்லி வேற வற்புறுத்துறாடா. நேத்து ஏதோ வெரைட்டியா பண்றேன்னு வீட்டில மிச்சம் மீதி இருந்த பச்ச மிளகால அல்வா செஞ்சு எடுத்திட்டு வர்றா. தப்பிச்சு வெளிய ஓடிரலாம்னு நெனச்சா ஒன்னு போலீஸ் கிட்ட அடி வாங்கணும், இல்ல கொரோனா கிட்ட மாட்டணும். அதுக்கு மிளகா அல்வாவே பரவாயில்லன்னு சாப்பிட்டேன்”னு சொல்லி ஃபீல் பண்றான். இன்னொருத்தன், ‘இந்த ஊரடங்கு, கொரோனா எல்லாம் முடிஞ்சு ஒரு வாரம் லீவு போடப் போறேன் டா’னு சொல்றான். திரும்பவும் லீவான்னு ஷாக்கா கேட்டா, ‘வீட்டில இருக்க இல்லடா, எல்லாரும் வீட்டிலயே இருந்ததால க்ளீனா இருக்குற ஊர சுத்தி பாக்கன்னு சொல்றான்’. நீங்க அப்டேட்ட படிங்க. நான் டீ போட்டுட்டு வர்றேன்.

**இதயவன்**

தப்பி ஓடிய கொரோனா வார்டில் அனுமதிக்கபட்டவர் உணவு பிடிக்காததால் வீட்டிற்க்கு சாப்பிட சென்றதாக கூறியதால் போலீஸ்சார் அதிர்ச்சி

அடேய் அது கொரோனா வார்டு டா கொடைக்கானல் சுற்றுலா இல்ல

**மெத்த வீட்டான்**

Go கொரோனா Go வாம்..அது எல்லா நாட்டுக்கும் போயிட்டுதான் இங்கே வந்திருக்குயா !

**ச ப் பா ணி**

நண்பர் பிரிந்துபோனபின்

நம்பராகிவிட்டார்

**மாஸ்டர் பீஸ்**

தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொள்ளும் மனநிலை அமைவதெல்லாம் வரம்!

வாய்த்தவர்கள் பாக்கியவான்கள்!

**படிக்காதவன்**

விடை தெரியாமல்

பயணிப்பவர்கள் சிலர்

கேள்வியே தெரியாமல்

பயணிப்பவர்கள் சிலர்

இந்த வாழ்க்கை

பயணத்தில்…

**எனக்கொரு டவுட்டு ⁉**

கை தட்டா சொன்னாங்க கை தட்டுறாங்க..!

விளக்கு வைக்க சொன்னாங்க, விளக்கு வைக்குறாங்க..!

வீட்ல இருக்க சொன்னா மட்டும் ஏன்டா இருக்க மாட்டேங்குறீங்க, உங்களை புரிஞ்சுக்கவே முடில..!

**mohanram.ko**

டூ மேனேஜர் – அய்யா, நீங்க என்ன வேணும்னாலும் திட்டுங்கய்யா,எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கய்யா ஆபிஸ் எப்பய்யா திறப்பீங்க?, இதுக்கு மேல வீட்ல இருக்க முடியாதுயா…

**உள்ளூராட்டக்காரன்**

நீங்க ஆபீஸை திறங்க திறக்காம போங்க

கடையை திறங்க திறக்காம போங்க

நான் என் வேலையை தொடங்கிட்டேன்

– வெயில்

**பழைய சோறு**

ஓடாத கடிகாரமும் ஒரு நாளைக்கு இரு முறை சரியான நேரம் காட்டும்..!

**mgspooja**

நட்பு புத்தகம் போன்றது அதில்

ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள் இருக்கும் அதனை சரி செய்யுங்கள்

பிழை என்பதற்காக நல்ல

புத்தகங்களை இழக்காதீர்.

**மெத்த வீட்டான்**

வீட்டுக்கு வீடு மொட்டைமாடியில் பட்டம் விடுறதுலயும் மக்கள் ஒற்றுமையை வெளிக்காட்டுறாங்க !

லாக் ஆஃப்

**-குமாரு**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *