மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

மனம் இருந்தால் ஃபோட்டோகிராபியும் உண்டு!

மனம் இருந்தால் ஃபோட்டோகிராபியும் உண்டு!

மின்னம்பலம்

'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்று கூறுவார்கள். கையில் கேமரா இல்லாமல், போஸ் கொடுக்க மாடல்கள் இல்லாமல் இருந்த போதும் சிறந்த போட்டோவை எடுக்க புத்திசாலித்தனம் இருந்தால் போதுமென்று உணர்த்தியிருக்கிறார் டிக் டாக் பயனாளியான இளைஞர் ஒருவர்.

சிறந்த புகைப்படக் கலைஞராக விரும்பும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள், ஏராளமான அவமானங்களையும் அவமதிப்புகளையும் கடந்து வருகின்றனர். திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்காமல், வாய்ப்புகளைத் தேடி ஓடும் போதும் வருமானமும் கிடைக்காமல் சிலர் குடும்பத்தாரால் கூட கேலி செய்யப் படுகிறார்கள்.

கனவுகளையும் விட்டுக்கொடுக்க முடியாமல், அதனை மறந்து வேறு வேலை செய்யவும் முடியாமல் ஒரு வித தவிப்புடனே இயங்கிக் கொண்டிருப்பர். இந்த நிலை புகைப்பட கலைஞர்களுக்கு இருக்கிறது என்று மட்டுமல்ல பிடித்த வேலையை ரசித்து செய்து அதன் வழி சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணும் பலரும் இத்தகைய விஷயங்களை கடந்து விருகின்றனர்.

அவ்வாறு, தான் பட்ட கஷ்டங்களை பின்னணி குரலாக ஒலிக்கவிட்டு தனது புகைப்படம் எடுக்கும் திறமையை டிக் டாக் வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர். சூரியன் மறையப் போகும் மாலைப் பொழுதில் இயற்கை எழில் கொஞ்சும் நீர் நிலைக்கு அருகே அந்த இளைஞர் நிற்கிறார். அப்பா, அவரை அரவணைக்க ஓடிவரும் குழந்தை என இரு மனித உருவங்களை சாதாரண வெள்ளைத் தாளில் வெட்டி எடுத்து அதனை தரையில் நிற்க வைத்துள்ளார்.

@alluarjun308

##mobile ##photography

♬ original sound - yusufpsask

இவை அனைத்தும் சரியாகக் கிடைக்கும் விதமாகத் தனது மொபைல் ஃபோனிலேயே அந்த இளைஞர் ஃபோட்டோ எடுக்கிறார். அவர் எடுத்த புகைப்படத்தில் இறுதி முடிவு அனைவரையும் வியக்க வைத்து விடுகிறது. அது ஃபோனிலேயே எடுக்கப்பட்ட ஃபோட்டோ என்றோ, உணர்வுப்பூர்வமான இந்த புகைப்படத்தின் ஆதாரமாக இருப்பது வெறும் வெள்ளைத் தாள் தான் என்று சாதாரணமாக பார்ப்பவர்களால் கண்டறிவது கடினம் தான்.

டிக் டாக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்து ஏராளமான லைக்குகளையும் பெற்று வருகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon