மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

சூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்!

சூர்யாவுடன் இணையும் அயலான் இயக்குநர்!

மின்னம்பலம்

விஷ்ணு விஷால் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இன்று நேற்று நாளை'.

அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் ரவிக்குமார். அப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த வருட இறுதியில் அயலான் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் எல்லாம் மாறிப்போனது. படம் வெளியாவது தாமதமானதால் இந்த இயக்குநருடன் இணைந்து இன்னொரு படத்தில் நடிப்பேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.

எனவே அடுத்தும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அயலான் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படமொன்றை ரவிக்குமார் இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சூர்யாவுக்கான கதை ஒன்றை அவரிடம் சொல்லியிருக்கிறார் ரவிக்குமார். அவருக்கும் அது பிடித்துப் போனதாம். அருவா, வாடிவாசல் ஆகிய படங்களை முடித்த பின்பு ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரரைப்போற்று படம் வெளியான பின்பு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

-இராமானுஜம்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon