மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கும் கெளதம் மேனன்

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கும் கெளதம் மேனன்

மின்னம்பலம்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் வர்ஷா பொல்லம்மா அவருடன் ஜோடி சேர்கிறார். 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன் மூலம் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ் கௌதம் மேனன் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்தத் திரைப்படத்தில் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு எஸ். இளையராஜா.

ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon