மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

எதையும் தாங்கும் இதயம் ஆனதே: அப்டேட் குமாரு

எதையும் தாங்கும் இதயம் ஆனதே: அப்டேட் குமாரு

மின்னம்பலம்

ரொம்ப நாளைக்கு அப்புறமா வாட்ஸ் அப் பக்கம் வந்த என் ஸ்கூல் ஃபிரெண்டு ஒருத்தன், பிக் பாஸ்ல கலந்து கிட்ட எல்லார் ஃபோட்டோவையும் ஸ்டேட்டஸ்ல வரிசையா வச்சு 'வாழ்க'னு போட்டிருந்தான். ரீ டெலிகாஸ்ட் பாத்துட்டு இப்படி பண்றானோன்னு விசாரிச்சா, 'அது இல்ல குமாரு. 50 நாள் ஃபோனும் கையுமா வீட்டுக்குள்ள இருந்ததுக்கே ஆதிமனிதன் மாதிரி மாறிட்டு இருக்கோம். ஆனா அவங்க பாவம் இல்லே. என்ன தான் விளையாட்டா இருந்தாலும் அவங்க கஷ்டத்தையும் நாம புரிஞ்சிக்க வேண்டாமா'னு கேக்குறான். 'ஆனா ஒண்ணு குமாரு. இந்த கொரோனா வந்த அப்புறம் எல்லாத்தையும் தங்குற சக்தியை எனக்கு ஒரு படி ஏத்திட்டு போயிருக்கு. இப்போ எல்லாம் டெய்லி உப்புமா கொடுத்தா கூட சிரிச்சிட்டே சாப்பிடுறேன். அத பாராட்டி கவிதை கூட எழுதுறேன்'னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நானும் போய் ஸ்டேட்டஸ் வைக்கிறேன்.

மாஸ்டர் பீஸ்

இங்க பலமானவன், பலவீனமானவன்னுலாம் யாரும் இல்ல,

தன் பலவீனங்களை பிறர் அறியாத வரை மட்டுமே பலமானவர்களாக வலம் வருவார்கள்,

தன் பலத்தினை பிறர் அறியாதை வரை மட்டுமே பலவீனமார்களாக வலம் வருவார்கள்,

அவ்வளவே!!!

நாகராஜ சோழன்.MA.MLA

கேரளாவில் லாட்டரி விற்பனை கடைகள் இன்று முதல் தொடங்கப்படும்.- செய்தி

நம்ம ஊருக்கு டாஸ்மாக் மாதிரி கேரளாவுக்கு லாட்டரி கடை!

இதயவன்

நாம் தொடும் மேற்பரப்புகள் மற்றும் பொருட்களின் மூலமாக கொரோனா வைரஸ் எளிதில் பரவாது~ அமெரிக்க நோய் தடுப்பு மையம்

ஆமா ஆமா வாட்ஸ்அப் மூலமாக மட்டும்தான் எளிதில் பரவும்?!!

உள்ளூராட்டக்காரன்

என்ன அண்ணாமல... சென்னையில் 109ன்னு பார்த்ததும் கொரோனா குறைஞ்சிடுச்சுன்னு சந்தோஷப்பட்டுட்டியா ?

நான் தான் கத்திரி வெயில்

வெண்பா

ரேசன் கடையில் இடைவெளி விட்டு நிற்பதே ஜென'ரேசன்' கேப்

சரவணன்.M

அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதுக்கப்புறம்...வெயிலோட வாழ பழகிக்கணும்னு சொல்வீங்க... கரெக்டா...?

கோழியின் கிறுக்கல்

இப்பெல்லாம் மகனிடம் "ஏன் மொபைலை ரொம்ப நேரம் பார்த்துட்டே இருக்கீங்க"ன்னு கேட்க முடியலை

"படிச்சிட்டு இருக்கேன்பா" என்று பட்டென பதில் வருகிறது!

Online Class பரிதாபங்கள்!!

இதயவன்

2022ம் ஆண்டு வரை 50நாள் ஊரடங்கு, 30நாள் தளர்வு, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த அறிவியலாளர்கள் பரிந்துரை. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக அறிவியலாளர்கள்

இந்த பரிந்துரை கொரனோவ கட்டுபடுத்தவா, பொருளாதாரத்தை குழி தோண்டி புதைச்சு நல்லடக்கம் செய்யவா?

சப்பாணி

பப்ஜி என்பார்

கேண்டி கிரஷ் என்பார்

நோக்கியா போனில் Snake game விளையாடாதார்

மெத்த வீட்டான்

லாக்டவுனால் பாதிக்கப்படாதது

சமூக வலைத்தளங்கள்தான் !

செந்திலின் கிறுக்கல்

வீட்ல தோசை வட்டமா இருந்தா அம்மா சுட்டது, சதுரமா இருந்தா அப்பா சுட்டது..!

லாக்டவுன்எஃபெக்ட்

ஜோக்கர்

"என்னாலதானே நீ இப்படி இருக்கே?!" என்றோ,

"உன் சந்தோசத்த கெடுக்கிறதே நாதானே" என்றெல்லாம் வசனங்கள் வந்தால் சுதாரித்து கொள்ளுங்கள்,

சுய சார்பாக நிற்கும் நிலைக்கு வரப் போகிறீ்ர்கள் என்று..!!!

இதயவன்

மின்வெட்டுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்': சிவகங்கை மாவட்ட மின்வாரியம்

எது இல்லாமல் வாழ முடியாதோ,யாரு கூட வாழ முடியாதோ அவங்க கூட எல்லாம் வாழ சொல்றது புது ட்ரெண்ட் போல!

-லாக் ஆஃப்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon