மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 மே 2020

க/பெ.ரணசிங்கம்: கவனம் ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

க/பெ.ரணசிங்கம்: கவனம் ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, வேல ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று(மே 22) வெளியிடப்பட்டது.

கலக்கமான முகத்துடன் விஜய் சேதுபதியும், கையில் விலங்கு மாட்டப்பட்டு கோபமாக ஐஸ்வர்யா ராஜேஷும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர். மேலும் போஸ்டரின் ஒரு ஓரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட சில பெண்கள் ஒன்று கூடி இருப்பதாகவும், அவர்களின் முன்னால் சில தண்ணீர் குடங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளது.

போஸ்டர் முழுக்க பத்திரிகை செய்திகளும் தெளிவில்லாமல் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இந்தத் திரைப்படம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், "அறம் படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகப்போகிறது க/பெ ரணசிங்கம். இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் அற்புதமான நடிப்பு பிரமிக்க வைக்கிறது" என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

த்ரிஷ்யம் 2 ரீமேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீத்து ஜோசப் ...

3 நிமிட வாசிப்பு

த்ரிஷ்யம் 2 ரீமேக் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீத்து ஜோசப்

தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

4 நிமிட வாசிப்பு

தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம் !

8 நிமிட வாசிப்பு

சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம்  !

சனி 23 மே 2020