மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

லாக்டவுன் ஸ்பெஷல் கறி இட்லி: அப்டேட் குமாரு

லாக்டவுன் ஸ்பெஷல் கறி இட்லி: அப்டேட் குமாரு

லாக் டவுன் ஆரம்பிச்சதுல இருந்து எப்போதும் ஃபோன் பண்ணா அக்கறையா நலம் விசாரிச்சு கொரோனா நிலவரம் பத்தி எல்லாம் என் நண்பன் கேட்பான். ஆனா இன்னைக்கு ஃபோன் பண்ணா, 'அப்புறம் பேசுறேன்டா'னு ரொம்ப பதற்றமா சொல்லிட்டு ஃபோன் கட் பண்ணான். எனக்கு ரொம்ப பயமாயிருச்சு. திரும்பவும் ஃபோன் பண்ணி 'என்னடா ஆச்சு'ன்னு கேட்டா, 'இல்லடா மச்சா, இட்லிக்குள்ள கறிக் குழம்பு வச்சு, ஸ்டஃப்ட் இட்லி செய்ய யூட்யூப் சேனல் எல்லாம் தேடிட்டு இருக்கேன். கிடைச்சதும் இன்னைக்கு கறி இட்லி சமைச்சு சாப்பிடணும். அதான் பிசி'ன்னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நானும் ரெசிபி பாத்திட்டு வர்றேன்.

கோழியின் கிறுக்கல்

கரோனா காலம் முடிந்த பின்னும் திருமணங்களை எளிமையாக நடத்தினால் எத்தனை பேருக்கு மொய் செலவு மிச்சமாகும்!!

சப்பாணி

இருப்பதை வைத்து

சந்தோசப் படமுடியவில்லை

"கடன்"!

மயக்குநன்

கொரோனாவால் ஒருவரும் உயிரிழந்துவிடக் கூடாது என்பதற்காக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது!- கடம்பூர் ராஜு.

அது... மறுபடியும் டாஸ்மாக் கடைகளைத் திறந்தபோதே தெரிஞ்சிடுச்சு பாஸ்..!

இதயவன்

நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்பது சந்தோஷத்தை தருதோ இல்லையோ நிச்சயமாக நிம்மதிய கெடுக்காது..!!!

கோழியின் கிறுக்கல்

வெயிலும் மழையும் வேதனையாக தெரியும் பொழுது,

பால்யத்தை இழக்கத் தொடங்குகிறோம்!!

சப்பாணி

முன்பு சைக்கிள் வைத்திருந்தோரை அலட்சியமாகவும், இப்போது

ஆச்சர்யமாகவும் பார்க்கிறோம்

ஜோக்கர்

அவர்களின் "விருப்பப் பட்டியலில்" இருக்கும் வரை மட்டுமே,

"விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக" நீங்கள் இருப்பீர்கள்..!!!

யதார்த்தம்

Mohanram.ko

இவனுங்க என்னடான்னா, எல்லா கடைகளையும் திறந்து வச்சிருக்காங்க

இவனுங்க என்னடான்னா, ஊரெல்லாம் சுத்தி வராங்க

கேட்டா ஊரடங்குன்னு சொல்வாங்க..

மயக்குநன்

பிரதமரை யாராவது இழிவாகப் பேசினால் அவர்களை அடியுங்கள். கட்சி உங்கள் பின்னால் துணை நிற்கும்!- எச். ராஜா.

உங்களுக்கு மட்டும் அட்மின்தான் துணை நிப்பாருங்களா ராசா..?!

எனக்கொரு டவுட்டு

பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க, அப்போதான் ?

அப்போதான்?

கொரானோ வந்துச்சு.

அப்றம்.?!

அப்பறமென்ன கழுத, கல்யாணமே வேணான்னு கொரானோ கூட வாழ பழகிட்டேன், போற போக்குல ஒரு சமுக சேவை..!

ரஹீம் கஸ்ஸாலி

வெயிலின் அளவை 100 டிகிரி, 101 டிகிரின்னு ஃபாரன்ஹீட்டில் சொல்லும்போது சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம் 40 டிகிரி, 41 டிகிரின்னு செல்சியஸ்சில் சொல்லும்போது புரிந்துகொள்ள சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது.

Prabhu.G

கல்விக் கட்டணம் தொடர்பாக தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.

தனியார் பள்ளிகள் மைண்ட் வாய்ஸ் ~

வாங்குன காசுக்கு பள்ளி பெயரில் ரசீது கொடுத்தால்தானே ஆதாரமாகும், நாங்க துண்டு சீட்டிலதான எழுதிக் கொடுப்போம்..

இது எப்படி இருக்கு!!

மாஸ்டர் பீஸ்

நேசிப்பது அழகு,

நேசிக்கப்படுவது பேரழகு!!!

-லாக் ஆஃப்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon