மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

வீட்டை அலங்கரிக்கும் டூ இன் ஒன் டேபிள்!

வீட்டை அலங்கரிக்கும் டூ இன் ஒன் டேபிள்!

நெரிசல் மிக்க நகரங்களில் சிறிய வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வசதி இருந்தாலும் தேவையான பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிக்க போதிய இடம் இருக்காது.

சிறிய வீடாக இருந்தாலும், பெரிய வீடாக இருந்தாலும் வீட்டில் ஒரு உணவு மேசை இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த வேண்டும் என்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அனைவருக்கும் விருப்பம் இருக்கும். வீட்டில் விருந்தினர்கள் வரும் போது அவர்களுக்கு டைனிங் டேபிளில் உணவைப் பரிமாற வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும் பலருக்கும் அதற்கான வாய்ப்பு இருப்பதில்லை.

அவ்வாறு கவலையில் இருக்கும் மக்களுக்கு உதவும் விதமாகவே ‘டூ இன் ஒன்’ டேபிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் இந்த டேபிளைப் பயன்படுத்தும் விதம் குறித்து டிக் டாக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் உணவு மேசை ஒன்றின் அருகே ஒருவர் அமர்ந்திருக்கிறார். பல வண்ண பழங்களின் ஓவியம் வரையப்பட்டுள்ள அந்த மேசை சிறியதாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் தெரிகிறது.

@imranshaikh6839

##fainal dinning table 😎##slowmo

♬ Turn Down for What - D'Mixmasters

ஆனால் அந்த நபர் எழுந்து மேசையை சரியாக மடித்து சுவற்றில் பொருத்தி விடுகிறார். அதன் கால்கள் இருக்கும் பகுதியையும் கீழே அழுத்தி ஓர் இடத்தில் பொருத்தி வைக்கிறார். சிறிது நேரத்திற்கு முன்னர் வரை 5 பேர் அமர்ந்து உணவு உட்கொள்ளும் அளவிற்கான உணவு மேசையாக இருந்தது, இப்போது சுவற்றில் ஓவியமாக வீட்டை அலங்கரிக்கிறது.

தேவைப்படும் நேரங்களில் மேசையாகவும் பிற நேரங்களில் வீட்டை அலங்கரிக்கும் அழகுப் பொருளாகவும் இதனைப் பயன்படுத்தலாம். டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இந்த டூ இன் ஒன் மேசை எங்கே கிடைக்கும் என்று தேடத் துவங்கிவிட்டனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon