மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

ஷாக் மேல ஷாக் தராதீங்க ஜி: அப்டேட் குமாரு

ஷாக் மேல ஷாக் தராதீங்க ஜி: அப்டேட் குமாரு

'எல்லாருமே கொரோனா காணாம போகுமா? லாக் டவுன் முடிவுக்கு வருமா? வெட்டுக்கிளி விலகி போகுமா? வெயில் மழையாகுமா?ன்னு பெருசு பெருசா யோசிக்கும் போது, என் பக்கத்து வீட்டு தம்பி, 'இதெல்லாம் அடுத்த வருஷத்தும் வந்தா நல்லா இருக்கும் இல்ல அண்ணா'ன்னு கேட்டு ஒரு ஷாக் கொடுத்தான். 'ஏன்டா உனக்கு இந்த விபரீத ஆசை'ன்னு கேட்டா, 'அப்போ தான் ஸ்கூலுக்கே போகாம, எக்ஸாமே எழுதாம பாஸ் பண்ணி விடுவாங்க'ன்னு சொல்றான். 'இப்போ என்ன கிளாஸ் படிக்கிற டான்னு கேட்டா, 'அதான் அண்ணா நானும் யோசிக்கிறேன். 2 மாசத்துல அதுவே மறந்திருச்சு. பாவம் தானே பத்தாவது படிக்கிற பசங்க. படிச்சது எதுவுமே மனசில இருக்காது இல்ல அண்ணே'ன்னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க.

ட(டா)க்ளஸ்

ஒருவர்க்கு,

நீ உண்மையாக இருப்பது போல நடித்தால் “நல்லவன் “ என்றும்

உண்மையாய் இருந்தால் “கெட்டவன்” என்றும் அழைக்கபடுவாய்

வெண்பா

வடகறி என்பார் கோழிக்கறி என்பார்

இட்லி கறி அறியாதார்.

இதயவன்

இந்தியாவில் ஜூலை தொடக்கத்தில் கரோனா பாதிப்பு 20 லட்சமாக உயரும் -

மிச்சிகன் பல்கலைக்கழகம்

நாட்டுல 20லட்சம் பணக்காரங்க இருக்காங்களா?!

கோழியின் கிறுக்கல்

எவரின் நிழலிலும் வெகு காலம் நின்றுக் கொண்டிருந்தால்,

உங்களின் வளர்ச்சி இல்லாமலேயே போய்விடும்!!

சப்பாணி

வெட்டுக்கிளி தான் உண்மையான Flying squad

சரவணன்.M

அரசு மீது பழி சுமத்தவே, "ஒன்றிணைவோம் வா" திட்டத்தை தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின்! - அமைச்சர் காமராஜ்

அந்த பழியை நீக்க, "பிரிப்போம்வா" ன்னு ஒரு திட்டத்தை நீங்க ஏன் தொடங்கக்கூடாது...?

எனக்கொரு டவுட்டு

இந்த தடவை மாஸ்க் சின்னத்திற்கு தேர்தல் நேரத்தில அதிக கிராக்கி இருக்கும்னு நினைக்குறேன்..!

Prabhu.G

ஆயிரம் ரூபாய் செலவு பண்ணிட்டு ஆறு ரூபாய் வரவு வந்தால் மகிழ்ச்சி அடைவதெல்லாம் என்ன மாதிரி டிசைன்...

~GooglePay

Pachai Perumal

கொரோனா, வெயில், வெட்டுக்கிளி.. வேற யாராச்சும் இருக்கீங்களா?

Aravind

படித்தால் தான் வேலை,

கை நிறைய சம்பளம் என்று

சொல்லி தரும சமூகம் ,

விதைத்தால் தான் சோறு

என்று சொல்லி தர மறுத்து விட்டது...!!

கார்த்திக் தமிழன்

பணக்காரன் எளிமையாக இருந்தால் பண்பாம் !!

நடுத்தரவர்க்கம் எளிமையாக இருந்தால் சிக்கனமாம் !!

ஏழை எளிமையாக இருந்தால் அவன் ஏதும் இல்லாதவனாம் !

ஷிவானி சிவக்குமார்

"மாநிலஅரசுகள் ரூ20 லட்சம்கோடியும், பொதுமக்கள்

ரூ10 லட்சம்கோடியும் திரட்டி மத்திய அரசிடம்

கொடுக்கவேண்டும். அப்போதுதான் பொருளாதாரம்

முன்னேறும் - நிதின்கட்கரி

அப்ப மோடி அறிவிச்ச 20 லட்சம் கோடி.!?

அதுக்குதான் உங்ககிட்ட கேட்குறோம்.!

மயக்குநன்

கொரோனா தொற்றை எதிர்கொள்ள தமிழக மக்களுடன் பாஜக 'தோள் கொடுத்து' நிற்கும்!- எல்.முருகன்.

'சமூக இடைவெளி'யை மறந்திட்டீங்களே..?!

-லாக் ஆஃப்

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon