மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

மாமனிதன் ரிலீசில் அதிகாரமில்லை: சீனு ராமசாமி

மாமனிதன் ரிலீசில் அதிகாரமில்லை:  சீனு ராமசாமி

தனது இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் வெளியீட்டில், தனக்கு அதிகாரம் இல்லை என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி-சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘மாமனிதன்’. விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப்பதிவில், “மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் ஆர்ஆர்-ஐ இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். திரு.யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு அரேஞ்ச்மென்ட்ஸ் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப்பதிவைப் பார்த்த ரசிகர்களுக்கு, தயாரிப்பு தரப்புடன் இயக்குநர் சீனு ராமசாமிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகம் எழுந்தது. தங்கள் குழப்பத்திற்கு விடை காண அவர்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் ‘யுவனுக்கும் உங்களுக்கும் இடையே என்ன தான் பிரச்னை?’ என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, சீனு ராமசாமி, ‘எனக்கும், அவருக்கும் எந்த பிரச்னையும் இல்ல சார்’ என்று பதிலளித்துள்ளார்.

இளையராஜாவுடன் இணைந்து யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற ‘மாமனிதன்’ எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon