~லாக்டவுனால் நிகழ்ந்த நன்மை: ராஷ்மிகா உருக்கம்!

entertainment

கொரோனா லாக்டவுன் காரணமாக தனக்குக் கிடைத்த மகிழ்ச்சி குறித்து நடிகை ராஷ்மிகா சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

கொரோனா பொது முடக்கம் பலரது வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளது. வேலை இழந்து, எவ்வித வருமானமும் இன்றி நாட்களை நகர்த்துவதற்கே பலரும் அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் தீமையிலும் சிறு நன்மை என்பதுபோல இந்த ஊரடங்கு சிலரது வாழ்க்கையில் மறைந்த மகிழ்ச்சியை மீண்டும் பெற்றுத் தந்துள்ளது.

அந்தவகையில் லாக்டவுனால் தான் பெற்ற நன்மை குறித்து [நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://www.instagram.com/p/CAvVRo7JlCj/?utm_source=ig_web_copy_link)அவர் தனது பதிவில், “எனது 18 வயதில் இருந்து என்னுடைய வாழ்க்கை ஒரு மாரத்தான் போன்றே இருக்கிறது. முடியும் இடம் வந்துவிட்டது என்று நான் ஒவ்வொரு முறை நினைக்கும்போதும் போட்டி மீண்டும் தொடங்கிவிடும். இதை நான் புகாராகக் கூறவில்லை. இதைத்தான் நான் எப்போதும் விரும்பினேன். உண்மையைக் கூற வேண்டும் என்றால் எனது வாழ்க்கையில் இத்தனை நீண்ட நாட்கள் நான் வீட்டில் இருந்ததே இல்லை.

பள்ளிப்பருவம் தொடங்கி உயர்கல்வி முடிக்கும் வரை விடுதியில்தான் தங்கியிருந்தேன். அப்போதெல்லாம் என் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் எனது டீன்ஏஜில் நான் ஒரு போராளியைப் போன்று இருந்தேன். இரவு நேரப் படப்பிடிப்புகளின்போது செட்டில் அம்மாவும் என்னோடு இருப்பார், குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடும் அளவுக்கு அப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று என்னுடைய குட்டி தங்கை அவளைச் சுற்றி நடக்கும் விஷயங்களைச் சமாளிக்க முயற்சிசெய்து கொண்டிருக்கிறாள்.

இந்த லாக்டவுன் நேரத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நான் வீட்டிலேயே இருக்கிறேன். இது மிக நீண்ட காலம். அதிலும் சிறப்பான விஷயம் என்னவென்றால் நாங்கள் யாரும் வேலையைப் பற்றி பேசுவதில்லை. அனைத்தையும் எதிர்கொள்ளும் வலிமையை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். நான் இத்தனை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், என்னை நம்புங்கள், குடும்பம்தான் வீடு. நீண்ட நாள் வேலையிலிருந்து மீண்டும் திரும்பி வந்து அமைதியை உணர்ந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *