Lபேப்பரில் ஒரு பென் ஸ்டாண்ட்!

entertainment

வேலையையும், வருமானத்தையும் இழக்க வைத்து கொரோனா ஊரடங்கு பலரையும் கவலையடைய செய்துள்ளது என்றாலும் எதிர்பாராமல் கிடைத்த இந்த ஊரடங்கை சிலர் எதிர்காலத்தை இனிமையாக்கப் பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டிலேயே இருக்கும் நேரத்தில் முடங்கிப் போகாமல், கிடைக்கும் பொருட்களை வைத்து கைவினைப் பொருட்கள் செய்வது, ஆன்லைனில் புதிதாக எதையேனும் கற்றுக் கொள்வது என்று சிலர் சிறப்பாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும், குப்பையாக வேண்டிய பொருட்களில் இருந்து பயன்தரும் கைவினைப் பொருட்களை சிலர் செய்வது அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.

அந்த வகையில் சாதாரண பேப்பரைக் கொண்டு அழகான பென் ஸ்டாண்ட் செய்யும் முறையை ஒருவர் விளக்குகிறார். நமது மேசையை அலங்கரிப்பதுடன், பயன் தருவதாகவும் இருக்கும் இந்த பென் ��்டாண்ட் செய்யும் முறை குறித்து அவர் டிக் டாக்கில் வீடியோ பதிவேற்றியுள்ளார்.

@shreyasarraf32

###beautiful pen stand with paper❤️☺️❤️##easy to make it#@gunnu682 #@princesarraf56 #@pratimasarraf03 #@karanyadav2993 #@bhavya15_17

♬ original sound – muniswamy.rmunisw

அதற்காக முதலில் பேனா ஒன்றை எடுத்து அதில் வெட்டி எடுத்த பேப்பரை சுற்றி நீள வடிவ உருளைகளாக தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் ஓரம் விடுபடாமல் இருக்க பசையால் ஒட்டி வைக்க வேண்டும். இவ்வாறு தேவையான அளவு பேப்பர் உருளைகளை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சம அளவிலான இரண்டு சிறு வட்ட வடிவ அட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் வெளி ஓரத்தில் பசை தடவி, ��ாம் செய்து வைத்திருக்கும் பேப்பர் உருளைகளை நிறுத்தி வைக்கும் படி ஒட்ட வேண்டும். பிற பேப்பர் உருளைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து ஒட்ட வேண்டும்.

பென் ஸ்டாண்ட் தயார்.

கலர் பேப்பரில் விரும்பும் வடிவிலான உருவங்களை வெட்டி எடுத்து பென் ஸ்டாண்டை குழந்தைகள் விரும்பும் வகையில் அலங்கரிக்கலாம்.

டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ 14 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *