மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

அரிசியிலும் அலங்காரப் பொருள்!

அரிசியிலும் அலங்காரப் பொருள்!

இந்த லாக்டவுன் காலகட்டத்தில் பலரும் தங்கள் ஓய்வு நேரத்தில், கைவினைப் பொருட்களை செய்து அது குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் வீட்டை அழகாக்குவதுடன் எந்த பொருளையும் வீணாக்காமலும் இருக்கும் விதத்திலான கைவினைப் பொருட்கள் செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நியூஸ் பேப்பர், வீணான அட்டைப்பெட்டி மற்றும் அரிசி போன்றவற்றைக் கொண்டு அழகான போட்டோ ஃபிரேம் செய்வது குறித்த வீடியோக்கள் டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளன.

@mahimasharma65

As On Demand special photo frame of mom 🥰🥰👌👌 ##creative ##creativity ##viral ##foryou ##tiktokindia ##tiktok

♬ original sound - klakarbande0

இதற்காக முதலில் ஒரு அட்டை பெட்டியை ஃபோட்டோ வைக்கும் விதமாக வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபிரேமின் வெளிப்புறத்தை அழகாக்கவும் விரும்பும் வடிவில் அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

வெட்டி எடுக்கப்பட்ட அட்டையில் பசை தடவி வீணான அரிசியை அதன் மேற்புறத்தில் தூவி ஒட்ட வேண்டும். பசை காய்ந்து அரிசி கெட்டியானவுடன் விரும்பும் நிறத்தில் பெயின்ட் செய்து கொள்ள வேண்டும். தயார் செய்த ஃபிரேமின் பின்புறம், ஃபோட்டோ கீழே விழாத வகையில் மற்றொரு தடிமனான தாளை ஒட்டி பயன்படுத்தலாம்.அதேபோன்று நியூஸ் பேப்பரில் அழகான ஃபிரேம் செய்வது குறித்த வீடியோவும் டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

@jeetboruah20

cute photo frame##diy ##doityourself ##foryou ##foryoupage ##edutok ##jeetsfam ##crafty ##craft @tiktok @tiktokindia

♬ original sound - AiSh

இதற்காக ஒரு நியூஸ் பேப்பரை சிறு செவ்வக வடிவ துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறு குச்சியை வைத்து உருளைகளாக தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட சிறிய நான்கு உருளைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து ஒட்ட வேண்டும்.

தேவையான நீளத்தில் வெட்டி விரும்பும் நிறத்தில் பெயின்ட் செய்ய வேண்டும். இதே போன்று ஃபிரேமின் நான்கு ஓரங்களையும் தயார் செய்து அவற்றை சரியான விதத்தில் ஒட்டி வைக்க வேண்டும்.

சதுர வடிவிலான ஃப்ரேம் கிடைத்ததும் அதன் அடிபாகத்தில் மற்றொரு தாளை ஒட்டி தேவையான ஃபோட்டோவை வைத்து அழகுபடுத்தலாம். இதை சுவற்றில் மாட்டி நமது வீட்டையும் அழகாக்கலாம்.

(குறிப்பு: உணவுப் பொருட்களை வீணாக்குவது முற்றிலும் தவறானதே. இது போன்ற அலங்காரப் பொருட்கள் செய்ய வீணான அரிசியை மட்டும் வீணாக்காமல் பயன்படுத்தலாம்)

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வியாழன், 4 ஜுன் 2020