மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ட்ரோல் கூட வழிகாட்டும்: அப்டேட் குமாரு

ட்ரோல் கூட வழிகாட்டும்: அப்டேட் குமாரு

ஃபேஸ்புக்ல அறிமுகமாகி, வாட்ஸ் அப்ல நெருக்கமான என் ஃப்ரெண்ட் ஒருத்தரு இன்னைக்கு ஃபோன் பண்ணியிருந்தாரு. அவர் கிட்ட கொரோனாவால பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லிட்டு இருக்கும்போது, ‘நண்பா இந்த கொரோனா தான் எனக்கு வாழ்க்கையே கொடுத்திருக்கு’ன்னு வித்தியாசமா சொன்னாரு. என்ன ஏதுன்னு விசாரிச்சா, ‘நீட் எழுதி பாஸ் ஆக முடியலன்னு டிகிரி படிச்சு முடிச்சா, வேலையே கிடைக்கல. சரி சமோசா கடை போட்டு பொழைக்கலாம்னு முடிவு பண்ணா வியாபாரமே இல்ல. இத எல்லாம் நினைச்சு சோகமா இருந்தப்போ தான் கொரோனா வந்துச்சு. சரி நம்ம கஷ்டத்துக்கு நாமே மருந்து போடலாம்னு கொரோனாவை கலாய்ச்சு நாலு மீம், ட்ரோல் ரெடி பண்ணேன். என்னோட மொக்க காமெடிக்கும் எல்லாரும் லைக் போட நான் ஃபேமஸ் ஆயிட்டேன். இப்போ நான் மீம் கிரியேட்டர்’னு சூர்யவம்சம் கதை மாதிரி சந்தோஷமா சொன்னாரு. இதப்பத்தி பக்கத்து வீட்டு தம்பி கிட்ட சொல்லலாமேனு போனா ‘தம்பி ஆன்லைன் கிளாஸ் அட்டண்ட் பண்றான்பா’னு அவங்க அம்மா சொன்னாங்க. நான் போய் எட்டிப் பாத்தா பப்ஜி விளையாடிட்டு இருக்கான். என்னடா அம்மாவை ஏமாத்துறியான்னு கேட்டா, ‘இல்லண்ணே இன்னைக்கு ஆன்லைன்ல P.ET கிளாஸ் அட்டண்ட் பண்றேன்’னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் அந்த மீம் பேஜ பாத்திட்டு வர்றேன்.

ச ப் பா ணி

"இனி நீங்கதான் சொல்லணும்" என்பது முடிவெடித்தலின் முடிவுரை

வெண்பா

ஊரடங்கு காலத்தில பெட்ரோல் செலவு மிச்சமாச்சு

ஸ்நாக்ஸ் செலவு அதிகமாச்சு

நாகராஜ சோழன் MA.MLA

தனியார்_மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு ஒருநாள் சிகிச்சை கட்டணமாக ரூ.7,500 நிர்ணயித்துள்ளது அரசு.

பேசண்ட்டுக்கு கொரோனா சரி ஆகீடுச்சாமா பில் அமௌன்ட்டு கேட்டு ஹார்டு அட்டாக் வந்துறுச்சாம்!!!

மயக்குநன்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை உறுதியுடன் எடுத்து வருகிறது!- மோடி.

வைரஸ் வேகமா பரவிட்டு இருக்கிற நேரமா பார்த்து ஊரடங்கு தளர்வை அறிவிச்சதைச் சொல்றாரோ..?!

Devendran Palanichamy

நாளைக்கே யானை தந்தத்தில் செய்த அலங்கார பொருள், யானை தோலில் செய்த ஜாக்கெட் என்றால், பெருமைக்கு வாங்கி குவிப்போரும் யானைக்கு முதலை கண்ணீர் வடிக்கின்ற சிலர்...

சரவணன். ℳ

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பார்க்கும் போது தான் கொரோனாவுடன் இணைந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று கவர்மென்ட் அடிக்கடி சொன்னதன் அர்த்தம் புரிஞ்சது

м υ я υ g α η . м

ஒரு சிறு நிகழ்வு தான் வாழ்வில் நம்மை பல தூரங்கள் அழைத்துச் செல்லும் வலிமை கொண்டது.!

நாகராஜ சோழன் MA. MLA

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு நன்றி - நடிகர் ரஜினி

லாக்டவுன் சமயத்தில் மக்கள்

கஷ்ட பட்டதை பத்தி பேச கேட் திறக்கலை, இப்போ மத்திய அரசை பாராட்ட மட்டும் கேட் திறக்குதா தலைவரே!

Delta Tamilian

கேரளா நவ்: இவங்களுக்கு யானை மீதெல்லாம் பாசம் கிடையாது,எங்க மேல காண்டு.

கோழியின் கிறுக்கல்!!

அன்பை சரியான நேரத்தில் வெளிப்படுத்த தெரியாததும்,

கோபத்தை தவறான நேரத்தில் வெளிப்படுத்துவதுமே நம்மின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்!!

நாகராஜ சோழன் MA. MLA

மாத்திரை சாப்பிட்டு பார்த்து சரி ஆக வில்லை என்றால் ஸ்கேன் செய்வது சிறிய மருத்துவமனை,

ஸ்கேன் செய்து பார்த்து விட்டு மாத்திரை சாப்பிட சொல்வது பெரிய மருத்துவமனை.

ஜிரா

விவேகானந்தர் பாறைக்குப் போக முடிஞ்ச படகு திருவள்ளுவர் பாறைக்குப் போகாததுக்குப் பேர் அரசியல்.

கடைநிலை ஊழியன்

கோவத்தை உப்பு போல பயன்படுத்தனும் !!

குறைந்தால் மரியாதை போயிரும் !!

கூடினால் மதிப்பு போயிரும் !!

மயக்குநன்

இந்தியாவிலேயே வெண்டிலேட்டர்கள் அதிகமுள்ள மாநிலம் தமிழகம்தான்!- முதல்வர் பழனிசாமி.

இப்பத்தான் மூச்சே வருது தலைவரே..!

நட்சத்திரா

உணவை கொடுத்து உயிரை பறிப்பதால் தான்

நம் உணவும் இப்பொழுது விஷமாய் மாறிக்கொண்டிருக்கிறது

-லாக் ஆஃப்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon