மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

காணக் கிடைக்காத நாணயங்கள்!

காணக் கிடைக்காத நாணயங்கள்!

நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி இருக்கும் நாணயங்களை நமது தேவைகளுக்காக நம்மில் பலரும் சேமித்து வைத்திருப்போம்.

பல விதங்களிலும், வடிவங்களிலும் இருக்கும் நாணயங்களை சேமித்து வைப்பதை சிலர் தங்கள் பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு ஒருவர் பொழுதுபோக்காக நாணயங்களை சேமித்து வைத்தது இன்றைய தலைமுறையினரிடம் நாணயத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்க உதவியாக இருக்கிறது.

இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த அனைத்து விதமான நாணயங்களின் மாடல்களையும் சேமித்து வைத்திருக்கும் ஒருவர் அது குறித்து டிக்டாக்கில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றி இருக்கிறார். வீடியோ பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு லட்சக்கணக்கான லைக்குகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது.

@dharun5310

from 90's kits to 2k kits பழைய நாணயங்கள் coin-currency

♬ original sound - dharun5310

1862ஆம் ஆண்டு இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த அரை அணா துவங்கி, சென்ட், பைசா, ரூபாய் என்று இன்று வரையில் நாம் பயன்படுத்தி வரும் அனைத்து வகையான நாணயங்களையும் அவர் வரிசைப்படுத்தி தனது வீடியோவில் காட்டியுள்ளார். இன்றைய தலைமுறை குழந்தைகள் பலருக்கும் காணக்கிடைக்காத அரிதான நாணயங்களை ஒரே வீடியோவில் வரிசைப்படுத்தி அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

முக்கிய அரசியல் நிகழ்வுகள் அல்லது தலைவர்களின் நினைவாக அரசால் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அவற்றில் சிலவற்றையும் அவர் சேமித்து வைத்துள்ளார். இதுவரையில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களால் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon