மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜுன் 2020

காஸ்ட்லி கொரோனா: அப்டேட் குமாரு

காஸ்ட்லி கொரோனா: அப்டேட் குமாரு

'அண்ணே தெரிஞ்சவர் ஒருத்தருக்கு ஒரு நாலு லட்சம் ரூபா உடனே தேவைப்படுது. எங்கயாவது லோன் எடுக்க வழி இருக்கா'ன்னு தெரிஞ்ச ஒருத்தரு ஃபோன் பண்ணி கேட்டாரு. 'என்னப்பா விஷயம்?'னு கேட்டா, 'மெடிக்கல் காலேஜ்ல கட்டணும். அதுக்கு தான்'னு சொன்னாரு. 'அதுக்கு காலேஜ்ல கிளாஸ் தொடங்கிருச்சா'ன்னு கேட்டா, 'இது காலேஜ் அட்மிஷனுக்கு இல்ல அண்ணே. கொரோனா ட்ரீட்மென்டுக்கு'னு சொல்றாரு. ஒருவேளை இதனால தான் பணக்காரங்களுக்கு மட்டும் தான் கொரோனா வரும்னு சொன்னாங்களோ? நீங்க அப்டேட்ட படிங்க.

சிவதாரணி

என் பொண்டாட்டி அப்பவே சொன்னா நான்தான் கேக்கலை

என்ன சொன்னாங்க?

அதான் கேக்கலைனு சொல்றேனே திரும்ப என்ன சொன்னானு கேட்டுகிட்டு

குழந்தை.செல்வா

இணையத்தில் மட்டும் ஒருத்தரை ஒரேநாள்ல பெரிய ஆளாக்கி யும் விட முடியும்..

அதே பெரிய ஆளகூட ஒரே நாளில் அட்ரஸ் இல்லாதவாறு கூப்புல உட்கார வைக்க முடியும்..!

Prabu.G

இந்தாங்க கரன்ட் பில். சீக்கிரம் பணத்தை கட்டுங்க.

யோவ் எனக்கு வீடே இல்லைனுதான்யா ப்ளாட்பார்ம்ல படுத்து கிடக்குறேன்.

ஸ்ட்ரீட் லைட் எரியுதுல்ல, பில்லை கட்டு மேன்...

Mohanram.ko

ரப்பர் செருப்பு போட்டுகிட்டா, கரண்ட் ஷாக்கே அடிக்காதுன்னு சொல்றமாதிரி தான், மாஸ்க் மட்டும் போட்டுகிட்டா கொரோனாவே வராது

ஜோக்கர்

கடைசியில கொரோனா வையும் தனியார் மயமாக்கிட்டாங்க.

மயக்குநன்

பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை!- செங்கோட்டையன்.

அதை கொரோனாதானே முடிவு செய்யும் தலைவரே..?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச?

ஏன் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகுது..?

டெஸ்ட் அதிகமா பண்றோம் அதனால எண்ணிக்கை அதிகமாகுது..

~ஏன்டா லேட்டுன்னு டீச்சர் கேட்டா லேட் ஆயிருச்சு மிஸ்ன்னு பதில் சொல்ற மொமென்ட்..

உள்ளூராட்டக்காரன்

எஸ்பிபி மாதிரியே பாடுவது லட்சியம்

அவர் பாடுற மாதிரியே முகபாவனை செய்வது நிச்சயம்

சப்பாணி

ஏன் தாடி வளர்க்கிறாய் என்று கேட்கிறார்கள்,

ஒரு வேலையற்றவன் வளர்ப்பதற்கும், இழப்பதற்கும் வேறு என்ன இருக்கிறது

Kalai Vani

எப்படிய்யா பாதாள சாக்கடைக்குள்ள விழுந்த..??

பாதாள சாக்கடை மூடாம இருந்திருக்கும் போல.. சமூக இடைவெளியோட நிற்க வட்டம் போட்டுருக்காங்கனு நினைச்சிட்டேன் டாக்டர்

மயக்குநன்

தமிழின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு நன்றி!- ரஜினி.

அப்பப்போ வாலண்டியரா வந்து மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு கன்டென்ட் கொடுத்துட்டுப் போற மனசு இருக்கே, அதுக்குப் பேருதான் கடவுள்..!

இதயவன்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நிகழாண்டு "அக்டோபா்" மாதத்தில்தான் கரோனா பாதிப்பு மிகப் பெரிய உச்சத்தை அடையும் என எம்.ஜீ.ஆர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது

அப்படினா அக்டோபர் மாசம் மேலும் தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கும்னு சொல்லுங்க?!

சப்பாணி

காசு கொடுத்து மரியாதையை வாங்குபவன் கடன் கொடுத்தவன்

Pachai Perumal

தமிழின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு நன்றி!- ரஜினி.

~அப்படியே அந்த இருபதுலட்சம் கோடிக்கும் ஒரு நன்றியை சொல்லிருங்க தலைவரே.

கோழியின் கிறுக்கல்

கரோனா பரவலின் வேகமும், இறப்பின் வேகமும் முன்பை விட பன்மடங்கு அதிகமாகி வருகிறது!

அதே சமயம் மக்களின் அலட்சியமும் அதை விட பன்மடங்கு அதிகமாகி வருகிறது!!

ரமேஷ்.ஏ

"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்ற பழமொழிக்கு ஏக பொருத்தம் ஆகிறார் விஷேச வீட்டில் மொய் எழுதுபவர்...!!!

கோழியின் கிறுக்கல்

'தலைகவசம் கட்டாயம்' என்ற சட்டம் என்பது எவ்வளவு மதிக்கப்படுகிறதோ,

அதே அளவில் தான் "முக கவசம் அவசியம்" என்ற அறிவுரையும் மதிக்கப்படுகிறது!!

சப்பாணி

ஒரு பெரிய பணக்காரர் ஆடிட்டர் வேலைக்கு இன்டர்வியூ வைத்திருந்தார்.48000யும் 84000யும் பெருக்குங்க..இதான் கேள்வி னு சொல்லியிருக்கார். நூறு பேரும் கணக்கு போட்டாங்க.

ஒருத்தர் மட்டும் உங்களுக்கு எவ்வளவு வரணும்னு கேட்டாராம்.உடனே அப்பாய்ன்ட் செய்திட்டார்

-லாக் ஆஃப்

நன்னடத்தை விதியும் தங்கம் விலையும்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

நன்னடத்தை விதியும் தங்கம் விலையும்: அப்டேட் குமாரு

படத்துக்கு தடை: செல்வராகவனுக்கு வந்த சோதனை!

3 நிமிட வாசிப்பு

படத்துக்கு தடை: செல்வராகவனுக்கு வந்த சோதனை!

ஜெகமே தந்திரம் & ஏலே தயாரிப்பாளரின் அடுத்த அதிர்ச்சி முடிவு! ...

3 நிமிட வாசிப்பு

ஜெகமே தந்திரம் & ஏலே தயாரிப்பாளரின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

வெள்ளி 5 ஜுன் 2020