மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

அனுராக் காஷ்யப் ஒரு முட்டாள்: கோபத்தில் நட்ராஜ்

அனுராக் காஷ்யப் ஒரு முட்டாள்: கோபத்தில் நட்ராஜ்

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஒரு முட்டாள் என்று பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிறந்தவராக இருந்தாலும் பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியம். இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் 'சதுரங்க வேட்டை', 'நம்ம வீட்டு பிள்ளை', 'சண்டிமுனி' 'காட்ஃபாதர்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இவரும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்தனர். அனுராக் இயக்கத்தில் வெளிவந்த 'பிளாக் ஃப்ரைடே' திரைப்படத்தில் நட்ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதற்குப் பின்னர் இருவரும் எந்த திரைப்படத்திலும் இணையவில்லை.

இந்த நிலையில் நேற்று(மே 4) தனது ட்விட்டர் பக்கத்தில் நட்ராஜ், அனுராக் காஷ்யப் குறித்து கோபமாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவுகளில் "சத்யா திரைப்படத்தின் கதாசிரியர்களில் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். அதனைத் தொடர்ந்து எங்களுடன் சேர்ந்து 'பாஞ்ச்' படத்தை அவர் உருவாக்கினார். பணம் எதுவும் வாங்காமல் நான் அவரை ஆதரித்தேன். 'லாஸ்ட் ட்ரெய்ன் டு மஹாகாளி' படத்துக்காகவும் நான் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. எல்லாமே அவருக்காக செய்தேன்.

'ப்ளாக் ஃப்ரைடே' படத்துக்காக நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம். ஆம், அனுராக் என்னை மறந்துவிட்டு அர்த்தமில்லாமல் பேசுகிறார். அவருடன் பணியாற்றிய பிறரைக் கேளுங்கள். அவர் ஒரு முட்டாள் வேறு ஒன்றுமில்லை. முட்டாள்கள் எப்போதும் முட்டாள்களாகவே இருப்பார்கள்.

நான் ஒரு சுயநலவாதியைப் பற்றிப் பேசுகிறேன். அது அனுராக் காஷ்யப் தான். நான் உண்மையைக் கூறுகிறேன். ஆனால் யாருக்கும் கேட்க விரும்பவில்லை. என்னதான் செய்வது? எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து நான் உண்மையை பேசுகிறேன்" என்று நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுகள் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon