மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 அக் 2020

நயன்தாராவா? அவரது நகலா? ஆனந்தக் குழப்பம்!

நயன்தாராவா? அவரது நகலா?  ஆனந்தக் குழப்பம்!

நடிகை நயன்தாராவை போன்று தோற்றம் கொண்ட இளம் பெண் ஒருவரின் புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்

நடிகை நயன்தாராவை போன்று தோற்றத்தில் இருக்கும் இளம் பெண் ஒருவர், அவர் நடித்த பிரபல திரைப்பட காட்சியை அதே மேக்கப் மற்றும் முகபாவனைகளுடன் டிக் டாக்கில் நடித்தது குறித்து மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதே வகையில் மற்றொரு இளம்பெண்ணும் நயன்தாராவின் தோற்ற ஒற்றுமையுடன் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிக பயன்பாடு இவ்வாறு பிரபலங்களின் உருவ ஒற்றுமை கொண்ட நபர்களையும், பிற திறமையாளர்களையும் அடையாளம் காண பெரிதும் உதவுகின்றன.

யாரை வேண்டுமானாலும் எப்படியும் மாற்றலாம் என்று கூறும் அளவிற்கு மேக்கப் கலையும் அசாதாரண வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் கண்ணன் ராஜ மாணிக்கம் என்னும் ஒப்பனைக் கலைஞர், நயன்தாரா போன்ற முக அமைப்பு கொண்ட இளம்பெண் ஒருவருக்கு மேக்கப் செய்து சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். அதன் மூலம் அச்சு அசலாக நடிகை நயன்தாரா போன்று தோற்றமளிக்கும் அவரது புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'அப்படியானால் இது நிஜமாகவே நயன்தாரா இல்லையா? எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்களா?' என்று கேட்கும் அளவிற்கு நயன்தாராவைப் போன்று அப்படியே இருக்கிறார் அந்த இளம் பெண். ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

ஞாயிறு, 5 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon