dஓடிடியில் வெளியாகிறதா ஷகீலா பயோபிக்?

entertainment

நடிகை ஷகீலாவின் பயோபிக் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதில் ஷகிலாவாக பிரபல இந்தி நடிகை ரிச்சா சட்டா நடிக்கிறார். பங்கஜ் திரிபாதி உட்பட பலர் நடிக்கின்றனர். கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் ஆக இருக்கிறது.

இதனிடையில், மலையாள நடிகர் சரயுவின் திரைப்படமான ‘ஷகீலா’ டீஸர் அண்மையில் வெளியாகி திரைப்பட பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் டீஸர் ஷகீலாவின் திரைத்தழுவல் போல் தோன்றியது. இதனால் இந்திரஜித் திரைப்படத்திற்கும் இப்படத்திற்குமான குழப்பங்கள் ரசிகர்களிடையே எழுந்தன. இருப்பினும், இந்திரஜித் லங்கேஷ் சமீபத்தில் அளித்த நேர்காணலில், மலையாள திரைப்படம் ஒரு குறும்படம் என்பதை கூறி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமே ஷகீலா என்ற நட்சத்திரத்துடன் ஒத்திருக்கிறது. சரயுவின் ஷகீலா டீஸர் வெளியான உடனேயே, தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு, படத்தின் கதை வேறுபட்டது என்பதையும், ஷகீலாவின் வாழ்க்கைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதையும் தான் உணர்ந்ததாக அவர் கூறினார். இருப்பினும், இந்த டீஸர் வைரஸ் ஆனதற்கான காரணம் ஷகீலாவின் பெயரைக் கொண்டதால் மட்டுமே என்று இந்திரஜித் லங்கேஷ் கூறினார்.

மேலும், இந்திரஜித் லங்கேஷ் தனது நேர்காணலில், ஷகீலா வாழ்க்கை கதையின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது என்றார். அத்துடன், படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியிட தயாராக உள்ளது. இந்தி மொழியில் படமாக்கப்பட்ட ஷகீலா பயோபிக் ஒரே நேரத்தில் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும். படத்தின் தென்னிந்திய பதிப்புகளில் ஒன்றிற்கு ஷகீலாவே டப்பிங் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று தெரிவித்தார்.

தற்போது ஊரடங்கினால் பல திரைப்படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், இந்திப் படமான ஷகீலாவும் டிஜிட்டல் தளத்திலேயே வெளியாகும் என தகவல்கள் கசிந்தன. இது குறித்துப் பேசிய இந்திரஜித், **”இந்த படத்தை வெளியிடுவதற்கு தியேட்டர்கள் மீண்டும் திறக்க வேண்டுமென படத்தின் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஷகீலா மக்களிடையே பிரபலமான நபராக இருப்பதால், தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தயாராக இல்லை”** எனக் கூறினார்.

ஷகீலாவின் பயோபிக்கை சமி நன்வானி தனது தயாரிப்பு பேனரின் கீழ் தயாரிக்கிறார். வரவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *