இது ‘ஃபிலிம்’ இல்லையா? விகாஸ் துபே என்கவுண்டர் பற்றி பாலிவுட்!

entertainment

கான்பூருக்குச் செல்லும் வழியில் நடந்த மோதலில் விகாஸ் துபே கொல்லப்பட்டார் என்ற செய்திக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கான்பூரில் எட்டு காவல்துறையினர் என்கவுண்டர் ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேற்று (ஜூலை 9) மத்தியப்பிரதேசத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 10) காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் விவாதப்பொருளாகியுள்ள இந்த என்கவுண்டர் குறித்து பாலிவுட் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

**நடிகை ரிச்சா சட்டா**

திரைப்படங்கள் வெகு தொலைவில் இல்லை என்று யாரும் சொல்வார்கள் என்பதில் சந்தேகமே. இது ‘ஃபிலிம்’ இல்லையா?

**நடிகர் கே.ஆர்.கே**

நேற்று வரை, விகாஸ் துபே ஒரு வில்லன் மற்றும் உத்திர பிரதேச போலீசார் ஒரு ஹீரோ. இன்று, உ.பி. போலீஸ் விகாஸ் துபேயை விடவும் மிகப் பெரிய வில்லனாக மாறிவிட்டது.

**இயக்குநர் ஹன்சல் மேத்தா**

இந்த கதைகளுக்கு புதிய ஸ்கிரிப்ட் தேவை.

**நடிகை அஹானா கும்ரா**

இது ஒரு மோசமான திரைக்கதை மற்றும் யூகிக்கக்கூடியது. விகாஸ் துபே என்கவுண்டருக்கு உ.பி. போலீசாருக்கு ஒரு சிறந்த ஸ்கிரிப்ட் மற்றும் இயக்குநர் கிடைத்திருக்க வேண்டும்.

**இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி**

விகாஸ் துபேயின் என்கவுண்டர், காவல்துறைக்கும் கூட நீதித்துறையின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் நீதித்துறை மிகவும் மெதுவாக இருப்பதால், நாங்கள் ‘தனிப்பட்ட நீதி’ முறையை வகுத்துள்ளோம். கொள்ளையர்கள், நக்சல்கள், குண்டர்கள் மற்றும் போலீசார் கூட இதை நம்புகிறார்கள்.

**நடிகரும் தயாரிப்பாளருமான நிகில் திவேதி**

எந்த பக்கமாக இருப்பினும் நாம் இழந்துவிட்டோம்.

**தாப்ஸி பன்னு**

இதை தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய தாப்ஸி பன்னு, அவர்கள் எங்கள் பாலிவுட் கதைகள் உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ளன என்று கூறுகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *