மருத்துவமனையில் பொன்னம்பலம்: சிகிச்சைக்கு உதவிய கமல்

entertainment

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் பொன்னம்பலத்துக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி புரிந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகர் பொன்னம்பலம். 1988ஆம் ஆண்டு வெளியான ‘கலியுகம்’ திரைப்படத்தில் அவர் அறிமுகமானார். தொடர்ந்து கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘ஆனஸ்ட்ராஜ்’, ‘நாட்டாமை’ போன்ற திரைப்படங்களின் மூலமாகப் பலரையும் ரசிக்க வைத்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பிரச்னை காரணமாகத் தற்போது அவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக கோளாறு சிகிச்சைக்கு உதவி செய்த கமல்ஹாசன், பொன்னம்பலம் குழந்தைகளின் படிப்புச் செலவும் ஏற்றுள்ளார். பொன்னம்பலம் குணமடைய வேண்டுகிறேன்.@ikamalhaasan @maiamofficial @KamalismForever @KHOurPride @RIAZtheboss @idiamondbabu pic.twitter.com/PCui3uQCxu

— Actor Kayal Devaraj (@kayaldevaraj) July 9, 2020

பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அத்துடன் தினமும் அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தும் வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் பொன்னம்பலத்தின் சூழலைக் கருத்தில்கொண்டு அவருடைய குழந்தைகளின் கல்வி செலவையும் நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பொன்னம்பலத்துக்கு கார்த்தி என்ற மகனும், கிருத்திகா என்ற மகளும் உள்ளனர். கமல்ஹாசனின் இந்த உதவிக்குப் பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *