}அச்சமூட்டும் மேஜிக்: மறைந்திருக்கும் பின்னணி!

entertainment

பிரபல மேஜிக் காட்சிகளின் உண்மைப் பின்னணியை விளக்கும் வீடியோ பதிவு ஒன்று முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ளது.

கூர்மையான வாள் ஒன்றை வாய்க்குள் இறக்கியும், கத்திகள் நிறைந்த பெட்டிக்குள் கைகளை நுழைத்து சாதாரணமாக வெளியே எடுத்தும் செய்யும் மாயாஜால வித்தைகளைக் கண்டு நாம் வியந்து இருப்போம். சற்றும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத இவற்றை எவ்வாறு நிகழ்த்தியிருப்பார்கள் என்று பலமுறை நாம் சிந்தித்து இருப்போம்.

இதன் பின்னணியில் ஏதேனும் மாய மந்திரங்கள் இருக்கலாம் என்று சிறுவயதில் நம்பியவர்களும் உண்டு. ஆனால் இவை அனைத்தின் பின்னணியிலும் அறிவும், அறிவியலும் தான் இருக்கிறது.

அதை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. முதலில் மேஜிக் வித்தையை செய்து காண்பித்து, தொடர்ந்து அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மத்தையும் விளக்குவதாக அந்த வீடியோ இருக்கிறது.

கூர்மையான கத்தி பொருத்தப்பட்ட ஒரு கருவியின் உள்ளே கையை நுழைத்து வேகமாக அதனை மூடுகின்றனர். பின்னர் எதுவும் நிகழாமல் சாதாரணமாக கையை வெளியே எடுக்கின்றனர். நம்மை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சியின் பின்னணியில் இருப்பது ஒரு சிறிய ஸ்பிரிங் போன்ற அமைப்பு மட்டும்தான். அதேபோன்று நீளமான கத்தி ஒன்றை வாய்க்குள் இறக்கி சிலர் நம்மை ஆச்சரியப்பட வைப்பார்கள்.

ஆனால் அது உண்மையான கத்தியே கிடையாது. வளையும் தன்மையுடன் கூடிய ஒரு பொருளை கத்தி போன்ற வகையில் உருவாக்கி இருக்கின்றார்கள். இதே போன்று ஏராளமான மேஜிக் காட்சிகளின் பின்னணி குறித்து இந்த வீடியோவில் விளக்கி இருக்கின்றனர்.

நீண்டகால கேள்விகள் பலவற்றிற்கும் விடையளித்த இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *