jபாலாவின் அடுத்த தயாரிப்பு: விசித்திரன்

entertainment

பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான பாலாவின் அடுத்த தயாரிப்பான விசித்திரன் படத்தின் தலைப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருக்கும் பாலா, தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக மலையாளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று (செப்டம்பர் 23) தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தப் படத்துக்கு ‘விசித்திரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். எம்.பத்மகுமார் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

**-ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *