cவீட்டுக்குள் ஆரி – யூடியூபில் வீடியோ!

entertainment

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஆரியிடமிருந்து வெளியாகியுள்ள வீடியோவைக் கண்டு அவரது ரசிகர்கள் உட்பட பலரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். இது பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து போட்ட திட்டமா அல்லது பிக் பாஸுக்குச் செல்வதற்கு முன்பே போட்ட திட்டமா என்றும் விவாதங்கள் தொடங்கிவிட்டன.

சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நடிகர் ஆரியின் திருமண நாள் வந்தது. அப்போது, ஆரியின் மனைவி – மகள் ஆகியோரிடமிருந்து வீடியோ மூலமாக மெஸேஜ் ஒன்றை வாங்கி பிக் பாஸ் ஆரிக்குப் போட்டுக் காட்டினார். அதைக் கண்டு நெகிழ்ந்துபோன ஆரி கண்கலங்கியதைக் கண்டு ரசிகர்களும் நெகிழ்ச்சியடைந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ஆரி செய்த வேலையினால் தற்போது அவரது குடும்பமே நெகிழ்ச்சியுடன் இருக்கிறது.

தனது சமூக வலைதளங்களைப் பார்த்துக்கொள்ளும் நண்பர்களிடம் வீடியோ ஒன்றைக் கொடுத்து, தனது திருமண நாள் வரையிலும் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க நேர்ந்தால் இந்த வீடியோவை வெளியிட்டுவிடும்படி கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் ஆரி. அதன்படி வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் பலவற்றையும் வைத்து வீடியோ வடிவில் டிசைன் செய்து, அதனுடன் ஒரு மெஸேஜையும் ஆரி பதிவு செய்திருக்கிறார். தனக்கும், தன் மனைவிக்கும் திருமணமானது எப்படி என்ற குட்டிக் கதையினையும் தனது வாழ்வில் முக்கியமானவர்களுக்கு நன்றி என்ற மெஸேஜையும் ஆரி பதிவு செய்திருக்கிறார். இதில் சொன்னது போலவே குட்டிக் கதைகளாக ஆரி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பேசினால் இன்னும் அதிக ஓட்டுகள் வாங்கலாம். அப்படி ஆரி சொன்ன குட்டிக் கதை என்ன என்பதை அவர் மூலமாகவே கீழேயுள்ள வீடியோ மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

-முத்து-

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *