D‘பாவக்கதைகள்’ டிரெய்லர்!

entertainment

திரையரங்கங்கள் 100% முழுமையாக இயங்க இன்னும் சில காலங்கள் பிடிக்கும். இதையுணர்ந்த இயக்குநர்கள் ஓடிடிக்கு ஆந்தாலஜி படங்கள் எடுத்துவருகிறார்கள். அப்படி, ஆந்தாலஜியாக ஓடிடியில் அடுத்து ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் படம் ‘பாவக்கதைகள்’.

நான்கு கதைகள், நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கும் இந்த ஆந்தாலஜி நெட்ஃபிளிக்ஸில் வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சொல்லப்போனால், நெட்ஃபிளிக்ஸின் முதல் தமிழ் ஆந்தாலஜி இது.

வெற்றிமாறன், சுதாகொங்கரா, கெளதம்மேனன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் இந்த ஆந்தாலஜி படம் உருவாகியிருக்கிறது. இயக்குநர் சுதாகொங்கரா இயக்கும் படத்தின் டைட்டில் தங்கம். இதில் பவானி ஸ்ரீ, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்கும் படத்துக்கு லவ் பண்ண உட்றனும் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அஞ்சலி, கல்கி கோச்சிலின், பதம் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வெற்றி மாறன் இயக்கியிருக்கும் குறுங்கதையின் டைட்டில் ஓர் இரவு. இதில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி நடித்திருக்கிறார்கள்.

அதுபோல, கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படத்துக்கு வான்மகள் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் சிம்ரனுடன் கெளதம் மேனனே நடிக்கவும் செய்திருக்கிறார். சுதா கொங்கராவுக்கு சூரரைப் போற்று, வெற்றிமாறனுக்கு அசுரன் படங்கள் சமீபத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த இயக்குநர்கள் இதில் இணைந்திருப்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

**டிரெய்லர்**

**-ஆதினி**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *