மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

மீண்டும் இயக்குநர் சிக்கலா? தந்தை கொடுத்த ஷாக்.. அதிர்ந்துபோன பிரசாந்த் !

மீண்டும் இயக்குநர் சிக்கலா? தந்தை கொடுத்த ஷாக்.. அதிர்ந்துபோன பிரசாந்த் !

இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஹிட்டான சில படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய ரீமேக் லிஸ்டில் முதலில் அறிவிக்கப்பட்ட பிரசாந்தின் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. அவருக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட படங்கள் ரிலீஸூக்கே தயாராகிவிட்டது.

இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. தபு, ராதிகா அப்தே நடித்திருந்த இந்தப்படம் மிகப்பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் ஆயுஷ்மான் நடித்திருந்தார். பல்வேறு விருதுகளை வென்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் கைப்பற்றினார்.

அந்தாதூன் ரீமேக்கில் தியாகராஜன் தயாரிக்க பிரசாந்த் நடிப்பது உறுதியானது. தபு ரோலில் தமிழில் சிம்ரன் நடிக்கிறார். அதோடு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் உள்ளிட்டோரும் நடிக்க இருக்கிறார்கள்.

பொதுவாக தியாகராஜன் தயாரிக்கும் படங்களில் பணியாற்றுவது சிக்கலான ஒன்றென திரையுலகில் சொல்லப்படும். ஏனெனில், படத்தினுள் அதிகமாக ஈடுபடுவார். அவரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்தப் படத்தில் முதலில் இயக்குநராக ஒப்பந்தமானது மோகன் ராஜா. சில காரணங்களால் படத்திலிருந்து வெளியேறினார். அதன்பிறகு, இயக்குநராக ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃபெட்ரிக் ஒப்பந்தமானார். அவரின் மூலம், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் படத்துக்குள் வந்தார்.

படத்தில் பணியாற்ற சில தொழில் நுட்பக் கலைஞர்களை ஃபெட்ரிக் ஏற்பாடு செய்தால், அவற்றையெல்லாம் மாற்றிவிட்டு வேறு ஆட்களை கொண்டுவருகிறாராம் தியாகராஜன். அதனால், இந்தப் படத்திலிருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டாராம். அவரோடு, சந்தோஷ் நாராயணன் உட்பட அனைத்து கலைஞர்களும் வெளியேறுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால், இயக்குநரைச் சமாதானப்படுத்தும் பணிகளில் இறங்கியிருக்கிறார் தியாகராஜன்..அதோடு, இன்னொரு பக்கம் தரணி உட்பட சில இயக்குநர்களிடமும் பேச்சுவார்த்தையும்

நடத்தியிருக்கிறார்.

ஃபெட்ரிக்கும் இறங்கிவரவில்லை. புதிய இயக்குநர்களும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அதனால், தானே இயக்க போவதாக மகன் பிரசாந்திடம் சொல்லியிருக்கிறார் தியாகராஜன். அவர் கொடுத்த ஷாக்கில் அதிர்ந்து போய்விட்டாராம் பிரசாந்த்.

இதுவரை நடந்ததையெல்லாம் பொருத்துக் கொண்டவர், இப்போதைய பிரச்னையால் தந்தை மீது மனவருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மே மாதம் படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தது படக்குழு. இன்னும் படப்பிடிப்பே துவங்கவில்லை. ஆக, சுமூகமான தீர்வு எப்போது வரும், படம் எப்போது துவங்கும் என்பது தெரியவில்லை.

- தீரன்

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

செவ்வாய் 9 மா 2021