மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்... சிவகார்த்திகேயன் செய்த வேலை!

பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்... சிவகார்த்திகேயன் செய்த வேலை!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் தலைமுறை நடிகர் சிவகார்த்திகேயன். சொல்லப் போனால், அடுத்த விஜய்யாக சிவகார்த்திகேயன் மாற வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் பரிசோதனை முயற்சியாக ஒன்றை சமீபத்தில் செய்து பார்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் அடுத்து சிவகார்த்திகேயனுக்கு வெளியாக இருக்கிறது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வருகிற மே 13ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படம் தயாராகிவருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அடுத்ததாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘டான்’. இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கான முதல்கட்டப் படப்பிடிப்பு கோவையில் நடந்துமுடிந்திருக்கிறது.

மிஸ்டர் லோக்கல், ஹீரோ, நம்ம வீட்டுப்பிள்ளை, டாக்டர், அயலான் என தொடர்ச்சியாக, ஹெவி வெயிட்டேஜ் படங்களாக நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். ஆனால், பழைய படங்களான காக்கிச்சட்டை, ரஜினி முருகன் படங்களில் ஸ்லிம்மாக இருப்பார். சரளமாக காமெடி சேட்டைகள் செய்வார். ரெமோ, வேலைக்காரன், சீமராஜா படங்களுக்காக உடற்பயிற்சி செய்து உடல் எடையை ஏற்றினார். அதோடு, மெச்சூர் நடிகராகவும் தெரிகிறார். இந்த நிலையில், டான் படத்துக்காக மீண்டும், பழைய சிவகார்த்திகேயனைக் கொண்டுவர கடுமையான டயட் பின் தொடர்ந்திருக்கிறார். ஆனால், நடந்ததோ வேறொன்று. சிவகார்த்திகேயன் எதிர்பார்த்ததை விட, செம ஒல்லியாகிவிட்டாராம்.

சிவகார்த்திகேயனின் சக நடிகர்களே அதிர்ச்சியாகிவிட்டார்களாம். அதோடு, உடலில் ஏதாவது பிரச்சினையா என துக்கம் விசாரிக்கவும் சிவகார்த்திகேயனுக்கு ஏதோ என்றாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதோடு, டான் படக்குழுவுக்கும் சிவகார்த்திகேயனின் இந்த உடல் எடை குறைவு திருப்தியைக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதோடு, சிவாவுக்கு எதுக்கு இந்த வேலை என நொந்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

மீண்டும் பழைய உடல் எடைக்குத் திரும்ப லேசான உற்பயிற்சியும், விரும்பிய உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். ‘இதுக்கு பெசாம பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே’ என்கிறார்கள் நெருங்கிய நண்பர்கள்.

- தீரன்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வெள்ளி 2 ஏப் 2021