மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

சானியா மிர்சா பயோபிக்கில் தனுஷ் பட நடிகை

சானியா மிர்சா பயோபிக்கில் தனுஷ் பட நடிகை

மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் விளையாட்டு துறையைச் சேர்ந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக திரைப்படங்களாகி வருகின்றன. அந்த வரிசையில் சானியா மிர்சாவின் பயோபிக் திரைப்படமாக இருக்கிறது.

விளையாட்டு வீரர்களின் பயோபிக்குகளிலேயே பெரிய ஹிட்டானது தோனியின் பயோபிக் திரைப்படமான ‘அன் டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் தான். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். உலகளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம்.

இதுமட்டுமின்றி, தடகள வீரர் மில்கா சிங் பயோபிக்கான ‘பாக் மில்கா பாக்’ என்கிற பெயரில் வெளியானது. பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம் பயோபிக்கானது அவரின் பெயரிலேயே ப்ரியங்கா சோப்ரா நடிக்க வெளியானது. சச்சின் பயோபிக்கானது ‘சச்சின்; பில்லியன் ட்ரீம்ஸ்’ எனும் பெயரில் வெளியானது. அதுபோல, கபில்தேவ் பயோபிக் திரைப்படமானது 83 எனும் பெயரில் உருவாகிவருகிறது. அதோடு, மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி , கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்டவர்களின் பயோபிக் திரைப்படங்களும் தயாராகிவருகிறது.

இந்த வரிசையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறும் படமாக இருக்கிறது. உலகளவில் 6 கிரான்ட்ஸ்லாம் பட்டங்கள், பிரிவு தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சானியா. சில வருடங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்திய மக்களுக்கு முன்மாதிரியாகவும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வீரரான இவரின் பயோபிக் திரைப்படத்தை எடுக்க முதல் கட்டப் பேச்சுவார்த்தை துவங்கியிருக்கிறது.

சானியா மிர்சா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல். ஃபிட்னெஸூடன், நடிப்புக்காக கொஞ்சம் மெனக்கெடும் நடிகையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என பட தயாரிப்புக் குழு விரும்புகிறதாம். அதனால், டாப்ஸி பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்திருக்கிறார்கள். விரைவிலேயே அதிகாரப் பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வெள்ளி 2 ஏப் 2021