Iஷங்கர் மீது மற்றொரு வழக்கு!

entertainment

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகிவரும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் விபத்துக்குப் பிறகு நடக்கவில்லை. இந்தியன் 2 துவங்கும் என காத்திருந்து பொறுமை இழந்த ஷங்கர் அடுத்தடுத்தப் படங்களுக்குத் தயாரானார்.

தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்க தில்ராஜு இயக்கத்தில் பான் இந்தியா படமும், அதை தொடர்ந்து அந்நியன் பட இந்தி ரீமேக் இயக்கவும் இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தமானார். இவ்விரு படங்களையும் துவங்க எத்தனிக்கும் சமயத்தில், பதட்டம் கொண்டது லைகா நிறுவனம். இவ்விரு படங்களும் துவங்கினால், இந்தியன் 2வை மீண்டும் ஷங்கர் கையில் எடுக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதால், நேரடியாக நீதிமன்றத்தின் உதவியை நாடியது லைகா.

அதன்படி, இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு முன்பாக வேறு எந்தப் படத்தை துவங்க கூடாதென ஷங்கர் மீது தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தது லைகா நிறுவனம். சென்னை நீதிமன்றத்தின் தனி நீதிபதி முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. ஷங்கரின் தரப்பு விளக்கம் கேட்காமல் முடிவெடுக்க முடியாதென நீதிபதி கூறியிருந்தார். இந்நிலையில், ஷங்கர் மீது மீண்டும் ஒரு புதிய வழக்கை லைகா நிறுவனம் தொடுத்திருக்கிறது.

ஷங்கர் மீது மேல்முறையீடு வழக்கு ஒன்றை ஹைதாராபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது லைகா. இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஷங்கர் தரப்பில் அவரின் வழக்கறிஞர் ஆஜரானார். ஏற்கெனவே, தனி நீதிபதி முன்னிலையில் சென்னையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, புதிதாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக லைகா மீது புகார் கூறியது ஷங்கர் தரப்பு.

தனி நீதிபதி முன்பாக விசாரணையில் இருக்கும் வழக்கினை முதலில் முடித்துவிட்டு, அதன்பிறகு, மேல் முறையீடு விசாரணையைத் தொடரலாம் என்றும், ஷங்கர் தரப்பு விளக்கம் வரும் வரையிலும் தடை விதிக்க முடியாதென்றும் நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதோடு, தயாரிப்புத் தரப்பின் முறையீடுகளை நிராகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வழக்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

**- ஆதினி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *