வலிமை ஷூட்டிங் மாற்றத்தால் உறுதியான ரிலீஸ் தேதி !

entertainment

அஜித் நடிக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அஜித்தின் 60வது படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டது. வெளிநாடு ஷூட்டிங் மட்டுமே மீதமிருந்தது. அதன் படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருந்தது படக்குழு. இதற்கு நடுவே, படத்தை எப்போது வெளியிடலாம் என்பது குறித்த ஆலோசனையும் நடந்து வந்தது.

வெளிநாடு ஷூட்டிங் எங்கே, எப்போது நடக்கும் என்பது உறுதியாவதன் அடிப்படையில், பட ரிலீஸை முடிவு செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தார் போனிகபூர்.

இந்நிலையில், வெளிநாடு ஷூட்டிங் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் படப்பிடிப்பு நடத்தவே திட்டமிட்டிருந்தார்கள். அங்கு சென்று வருவதில் சிக்கல் நிலவுகிறது. கொரோனா அச்சமும் இருப்பதால், திரும்பி வருவதில் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் யோசித்திருக்கிறது படக்குழு.

இறுதியாக, வலிமை ஷூட்டிங்கிற்காக ரஷ்யா செல்வதை உறுதி செய்திருக்காம் படக்குழு. ஒரு வாரம் ஷூட்டிங் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, முழு படப்பிடிப்பும் முடிகிறதாம். அதோடு, வெளிநாடு ஷூட்டிங் உறுதியாகிவிட்டதால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியையும் லாக் செய்திருக்கிறார்கள். அதாவது, வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வலிமை படத்தை வெளியிட திட்டமாம்.

பொதுவாக, அஜித் படங்கள் தீபாவளி, பொங்கல், சம்மர் ஹாலிடேவை டார்கெட் செய்தே வெளியாகும். அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகை வருகிறது. அதோடு தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால், அக்டோபர் 14ஆம் தேதியான வியாழக்கிழமையை தற்காலிகமாக லாக் செய்திருக்கிறது படக்குழு.

**- தீரன் **

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *