மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

ஓடிடியில் சாதனை படைத்த அரண்மனை-3!

ஓடிடியில் சாதனை படைத்த அரண்மனை-3!

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான அரண்மனை 3 படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளதாக ஜீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜீ5 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ”ஜீ5 நிறுவனம் அடுத்தடுத்து நல்ல கதைகளுடன், வெற்றிகரமான திரைப்படங்களை தந்து, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில் மலேஷியா டூ அம்னீஷியா, டிக்கிலோனா மற்றும் விநோதய சித்தம் திரைப்படங்களைத் தொடர்ந்து, தற்போது அரண்மனை 3' திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. வெளியான 12 நாட்களில், 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது சித்திரை செவ்வானம் படத்தை வெளியிட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

திரையரங்கில் வெளியிடப்பட்டு வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் ஓடிடியில் அரண்மனை-3 சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்பலவாணன்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

சனி 4 டிச 2021