மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

சம்பளத்தை உயர்த்தும் சிம்பு-எஸ்ஜே சூர்யா

சம்பளத்தை உயர்த்தும் சிம்பு-எஸ்ஜே சூர்யா

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றிப் படத்தில் நடித்த கதாநாயகன் தனது சம்பளத்தை அடுத்த படத்திற்கு அதிகம் கேட்பார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'மாநாடு' படம் எதிர்பார்ப்புகளை மீறி தமிழகத்தில் வசூல் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் வெற்றியால் பத்து வருடங்களுக்குப் பிறகு சிலம்பரசன் நாயகனாக நடித்துள்ள படம் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது 'வெந்து தணிந்தது காடு, பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வரும் சிலம்பரசன், இனி ஒப்பந்தமாக உள்ள புதிய படங்களில் நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்த வலிமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா ஏற்கெனவே நடிக்க ஒப்புக் கொண்ட படங்களுக்கு கூட சம்பளத்தை உயர்த்திக் கேட்டு வருகிறாராம். 'மாநாடு' படத்தில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. புதுவிதமான வில்லத்தனத்தில் சூர்யா ரசிகர்களைக் கவர்கிறார் என அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என்கிறது கோடம்பாக்க சினிமா வட்டாரம்.

விஜய், அஜித்குமார் இருவருக்கும் திருப்புமுனையைக் கொடுத்த வாலி, குஷி படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா, தனக்குக் கிடைத்த 'மாநாடு' திருப்புமுனையால் சம்பளத்தை உயர்த்துவதும் தவறில்லை என்றாலும், ஏற்கெனவே நடிக்க ஒப்புக் கொண்ட படங்களின் சம்பளத்தை உயர்த்துவது தொழில் தர்மம் இல்லை என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.

அம்பலவாணன்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

சனி 4 டிச 2021