மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 ஜன 2022

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

‘மைனா' படத்தின் மூலம் பிரபலமடைந்த அமலா பால், அதன்பின் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

இந்த சூழ்நிலையில் காதல் திருமணம் செய்தார். ஆனால் திருமண வாழ்க்கை குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்து விவாகரத்து பெற்றார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அவருக்கு படங்கள் குறைந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கானல்நீராகி போனது.

கடைசியாக 2019ல் வெளிவந்த 'ஆடை' படத்தில் முதன்மைக் கதாநாயகியாக நடித்தார். கடந்த வருடம் வெளிவந்த 'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். தற்போது “அதோ அந்த பறவை போல, கடவர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். படங்கள் இல்லை என்றபோதிலும் தொடர்ச்சியாக அவரது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

தற்போது, சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அமலா பால். இந்தியில் அமலாபால் நடித்துள்ள 'ரஞ்சிஷ் ஹை சாஹி' வெப் தொடருக்கான விளம்பர நிகழ்வின் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அவை. “நாம் வேடிக்கையாக இருக்கும் போது நேரம் பறக்கிறது என்று சொல்வார்கள். அம்னா பர்வேஸுக்கு உயிர் கொடுக்க நான் அவ்வளவு கடினமாக உழைத்தேன். எனக்கும் சரியான நேரம் கிடைத்தது. நான் செய்வதை விரும்புவதற்கும், நான் விரும்புவதை செய்வதற்கும் சிறப்பாக இருக்கிறது,” என அப்புகைப்படங்களின் கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.

'ரஞ்சிஷ் ஹை சாஹி' வெப் தொடர் பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட், 1970களில் இந்தி திரையுலகில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக பவனி வந்த பர்வீன் பாபி ஆகியோருக்கு இடையிலான காதலைப் பற்றிய தொடர் என்கிறது இந்தி திரையுலகவட்டாரம். பர்வீன் பாபி கதாபாத்திரத்தை இத் தொடரில் அம்னா பர்வேஸ் எனப் பெயர் வைத்து எடுத்துள்ளார்களாம். அக்கதாபாத்திரத்தில்தான் அமலா பால் நடித்துள்ளார்.

-இராமானுஜம்

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

சனி 22 ஜன 2022