மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

சினிமாவில் நடிக்க இருக்கிறாரா மணிமேகலை?

சினிமாவில் நடிக்க இருக்கிறாரா மணிமேகலை?

‘குக் வித் கோமாளி’ புகழ் மணிமேகலை சினிமாவில் நடிக்க இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சன் டிவியில் தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் மணிமேகலை. பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக மூன்று சீசன்களில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தனது சொந்த ஊரான கிராமத்துக்கு சென்றவர் அங்கு தனது கணவர் ஹூசனுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இப்போது மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி- பதில் மூலம் கலந்துரையாடி இருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் படம் நடிக்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மணிமேகலை, ‘எனக்கு படங்கள் செய்வதில் பெரிதாக ஆர்வம் இல்லை. நடிப்பு எனக்கு வரவும் வராது’ என தெரிவித்துள்ளார்.

இன்னொருவர், ‘உங்கள் கணவர் பெயரை மொபைலில் என்னவாக சேவ் செய்துள்ளீர்கள்?’ என கேட்டதற்கு ‘க்ரஷ்’ என பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர், ‘எப்படி எல்லா விஷயங்களையும் நம்பிக்கையாக எதிர்கொள்கிறீர்கள்?’ என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மணிமேகலை, ‘நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என மற்றவர்கள் கருத்து சொல்லி முடிவு செய்ய கூடாது. நம் மனநிலையை வைத்து நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நான் எப்பவுமே அதில் உறுதியாக இருப்பேன்’ என பதிலளித்துள்ளார்.

இதே போல இன்னொரு ரசிகர் மணிமேகலையிடம், ‘நீங்கள் எப்படி எப்பவும் பிஸியாக சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்?’ என கேட்டதற்கு, ‘நான் இயல்பிலேயே அப்படி இருக்க கூடிய நபர் தான். அதே போல, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களையும் பிடிக்கும்’ என கூறியுள்ளார்.

ஆதிரா

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

செவ்வாய் 17 மே 2022