மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

தனுஷ், லைகா யூடியூப் சேனல்கள் முடக்கம்!

தனுஷ், லைகா யூடியூப் சேனல்கள் முடக்கம்!

நடிகர் தனுஷூக்கு சொந்தமான யூடியூப் சேனல் முடக்கப்பட்டது.

நடிகர் தனுஷ் ‘வுண்டர்பார்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக இந்த நிறுவனம் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டது. இருந்தபோதிலும், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூப் பக்கத்தில் அவர்கள் படங்கள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம். தனுஷின் யூடியூப் சேனலை பிரபல டிஜிட்டல் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வந்தது.

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி2’ படத்திலிருந்து ரவுடி பேபி பாடல் இந்த யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட பில்லியன் பார்வைகளை கடந்து உள்ள இந்த பாடல் வசூலில் புதிய சாதனைப் படைத்தது.

இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை 3 மணி அளவில் யூடியூப் சேனல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது ரவுடி பேபி பாடலின் வருவாயை குறிவைத்தே இது நடந்திருக்க வேண்டும் என தனுஷுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேனல் முடக்கப்பட்டதை அடுத்து, அதை மீட்பதற்காக யூடியூப் இந்தியா நிறுவனத்திற்கு தனுஷ் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, ’வுண்டர்பார்’ யூடியூப் பக்கத்தினை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தனுஷின் ’வுண்டர்பார்’ நிறுவனம் போலவே, லைகா நிறுவனத்தின் யூட்யூப் சேனல் பக்கமும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ‘வுண்டர்பார்’ யூடியூப் பக்கம் மீண்டுவிட்டது என அந்நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

ஆதிரா

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

புதன் 18 மே 2022