மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

தனது இரண்டாவது திருமணம் குறித்து இசையமைப்பாளர் டி. இமான் மனம் திறந்துள்ளார்.

2002ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் 'தமிழன்' படம் மூலமாகத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். அதன்பிறகு 'விசில்', 'கிரி', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ' நம்ம வீட்டு பிள்ளை', 'அண்ணாத்த' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கும் மோனிகா என்பவருக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 13 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாகவும், தாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாகவும் தங்களுடைய பர்சனல் பக்கங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இசையமைப்பாளர் இமான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு பிறகு தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பெற்றோர் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அதற்காக பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இரண்டாவது திருமணத்திற்கான பெண், கணவனை இழந்த, பெண் குழந்தை உள்ளவராக இருப்பதை தான் எதிர்பார்ப்பதாகவும் மகிழ்ச்சியாக அவரை ஏற்றுக் கொண்டு திருமண வாழ்க்கைக்கு தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இமானுக்கு இரண்டாவது திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை பகிர்ந்து இமான் கூறியிருப்பதாவது, 'கடந்த ஞாயிறன்று அமலியுடன் எனது மறுமணம் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. எனது கடினமான சமயத்தில் எனக்கு ஆறுதலாக இருந்த என்னுடைய தந்தை டேவிட் கிருபாகருக்கு நன்றி. இந்த நிச்சயிக்கப்பட்ட மறுமணம் எனக்கு பெரிய மருந்தாகவும், கடைசி சில வருடங்களாக எனக்கு என்னுடைய குடும்பத்திற்குமான கடினமான நேரத்திற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகவும் உள்ளது. மறைந்த என் அம்மாவின் ஆசீர்வாதமும் உண்டு. அமலியை நான் கரம் பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.

அமலியின் மகள் நேத்ரா இனி எனக்கு மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தை என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அதே சமயம் என்னுடைய மகள்கள் வெரோனிகா மற்றும் பெல்ஸிகாவையும் என் திருமணத்தன்று மிஸ் செய்கிறேன். அமலி, நேத்ரா மற்றும் என் உறவினர்கள் அனைவரும் அவர்கள் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி வருவதை ஆர்வத்துடனும் அன்புடனும் எதிர்ப்பார்த்து உள்ளனர். அமலியின் குடும்பத்திற்கும் இசை ரசிகர்கள் உங்களுடைய அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

2 நிமிட வாசிப்பு

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

9 நிமிட வாசிப்பு

மாதவன் பேச்சு சர்ச்சையும் மயில்சாமி அண்ணாதுரை விளக்கமும்

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

திரௌபதி முர்மு: சர்ச்சை கருத்துக்கு ராம்கோபால் வர்மா விளக்கம்!

புதன் 18 மே 2022